வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட் மூலம் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள்!

ISRO

இஸ்ரோவின் புதிய செயற்கை கோள் இன்சாட்-3டிஎஸ் இந்த செயற்கைகோள் மூலம் வானிலை மாற்றங்களை முன்னதாகவே கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக அதிநவீன பல புதிய தொழில் நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2,274 கிலோ எடை கொண்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி., எப்14 என்ற ராக்கெட், மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை, 5:35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது இந்த செயற்கை கோள் ஜி.எஸ்.எல்.வி., வகையில், 16வது ராக்கெட் ஆகும்

இது பூமியின் பருவ நிலை மாற்றத்தை துல்லியமாக கண்காணித்து வானிலைக்கான தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலமாக புயல், கனமழை உட்பட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version