தமிழகத்தின் பெரும்பாலான திருக்கோயில்களுக்கு முன்பாக இருக்கக்கூடிய ஈவேரா சிலைகளில் உள்ள கல்வெட்டுகளில் கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி கடவுளை கற்பித்தவன் முட்டாள் அயோக்கியன்” என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருக்கிறது. கோடானுகோடி இந்து இறைநம்பிக்கையாளர்களின் நம்பிக்கை கடவுள் இருக்கிறார் என்பது. மசூதிகளின் முன்போ சர்ச்சுகளின் முன்பு ஈவேரா சிலை இல்லை மேலே சொன்ன வாசகம் அடங்கிய கல்வெட்டுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த திருக்கோவில்களிலும் “கடவுளை நம்பாதவர்கள் முட்டாள்கள் கடவுளை வணங்காதவர்கள் அயோக்கியர்கள் கடவுளைப் பற்றி பிரச்சாரம் செய்யாதவர்கள் காட்டுமிராண்டிகள் “என்று கல்வெட்டு வாசகங்கள் இடம் பெறவில்லை.அப்படி இருக்கும்போது அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் வைக்கப்படும் ஈவேரா சிலைகளில் உள்ள வாசகம் இறைநம்பிக்கையாளர்களை கொச்சைப்படுத்தி மனவேதனை அடைய செய்யும்படி இருக்குமேயாகில் அது சரி செய்யப்பட வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல பொறுப்பு.
கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்வதற்கு திராவிடர் கழகத்தினுடைய அலுவலகங்களில் அவர்கள் சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு உள்ளாக வைத்துக்கொள்ளட்டும் அதைவிட்டு விட்டு பொதுவெளியில் வைக்கப்பட்ட கல்வெட்டுகளை அகற்றிட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் இதை அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ் இன உணர்வுகாக இந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்தது போல,விளம்பர பெயர்ப்பலகைகளில் ஆங்கில மொழி கூடாது என்பதற்காக ஆங்கில மொழி எழுத்துக்களை தார் பூசி அழித்தது போல,
பிராமணாள் காபி பிராமணாள் கஃபே என்று இருப்பது ஜாதியை ஆதரிக்கிறது என்று தார்பூசி அழித்த திராவிட கழகத்தவர்களைப்போல இறைநம்பிக்கை கொண்ட, முருக பக்தர்கள், ராம பக்தர்கள், சிவனடியார்கள், மற்றும் அனைத்து மத இறை நம்பிக்கையாளர்களும் திரண்டெழுந்து கடவுள் மறுப்பு வாசக கல்வெட்டுக்களை தார்பூசி அழிக்கும் அல்லது அகற்றும் சூழலுக்கு இந்து சமுதாயம் தன்னெழுச்சியாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.கடவுள் மறுப்பு வாசகங்கள் கல்வெட்டுகளை அகற்றிட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இறை நம்பிக்கையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் என நம்புகிறோம்.
இராம இரவிக்குமார் இந்து தமிழர் கட்சி நிறுவன
தலைவர்