இந்தாண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியை மாற்ற உள்ளதாகத் தகவல்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நவம்பர் எட்டாம் தேதியில் இருந்து பத்தாம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை நடத்த ஐபிஎல் நிர்வாகக் குழு ஏற்கெனவே திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டியை நவம்பர் எட்டாம் தேதியில் இருந்து பத்தாம் தேதிக்கு மாற்ற உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அடுத்த 3 நாட்களில் நடைபெற உள்ள ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

முந்தைய கால அட்டவணைப்படி ஐபிஎல் விளையாட்டுக்குப் பின் இந்திய அணியினர் இந்தியா திரும்புவதாக இருந்தது.

இறுதிப்போட்டி 2 நாட்கள் தள்ளி வைக்கப்படுவதால், இந்திய அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல இருக்கின்றனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version