கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி, தமிழக அரசியலில் களம் இறங்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் பாஜகவில் இணையப்போவதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதேகேற்றார் போல் பாஜக பொதுச்செயலாளர் நல்வரவு என அண்ணாமலை ஐபிஎஸ் புகைபடத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார்
யார் இந்த அண்ணாமலை ஐபிஎஸ் தமிழகத்தில் திருச்சி அருகே உள்ள கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய தந்தை குப்புசாமி. அண்ணாமலை மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர். பின்னம் எம்.பி.ஏ படித்தார். காவல்துறை மீது உள்ள மோகத்தால், ஐபிஎஸ் படித்து தேர்வாகி காவல்துறை பணியாற்றி வந்தவர்.
இவர் பெங்களூரு தெற்கு மண்டல துணை காவல்துறை ஆணையராக பணியாற்றியுள்ளார். மேலும் கர்நாடகாவில் சிங்கம் என அழைப்பார்கள். பல்வேறு வழக்குகளை திறமையான கையாண்டும், ரவுடிகளை அடக்கி ஒடுக்கியும் திறமையான பணியாற்றியதால், அவரை கர்நாடக சிங்கம் என்றும் அன்போது மக்கள் அழைக்கிறார்கள்.
அண்ணாமலை தற்போது பணிச்சுமை காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இவர் குமாரசாமி ஆட்சியின் போது இவருக்கும் முன்னாள் முதலவர் குமாரசாமிக்கும் கருத்து வேறுபாடு இருந்ததகா கூறப்படுகிறது. மேலும் இவர் மீது இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் பற்று வைத்துள்ளார்கள். இவர் அரசியல் ஈடுபடுவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை சில மாதங்களுக்கு முன் கூறினார். ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ராஜினாமா குறித்து டிவிட் போட்ட ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, சாதனையாளர்கள், இளைஞர்கள் அரசியலில் நுழைவது மகிழ்ச்சியூட்டுவதாக குறிப்பிட்ட்டார் . அதைத்தொடர்ந்து அண்ணாமலை அரசியலுக்கு வர சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், கடந்த மே மாதம் அண்ணாமலை தமிழகத்தில் அரசியலில் ஈடுபட உள்ளதாக ஃபேஸ்புக் நேரலையில் தெரிவித்து அவருடைய அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார். தமிழகத்தில் 2021 ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகி வருவதாக தெரிவித்தார்.
முகநூல் நேரலையில் பேசும்போது “நான் தமிழக அரசியலில் நுழைய திட்டமிட்டுள்ளேன். அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடுவேன். அரசியலில் நுழைவதன் மூலம் அமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறேன்” என் தெரிவித்திருந்த நிலையில் இன்று பாஜகவில் இணைவதாக செய்திகள் வந்துள்ளது. அவர் பாஜக தலைவர் ஜெ பி நட்டா தலைமையில் இணைவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு பாஜக முழுவீச்சில் இறங்கியுள்ளது.
பாஜகவின் இளைஞரணி ஏற்கனேவே படு வேகத்தில் சென்றுகொண்டுள்ளது. கறுப்பர் கூட்டம் நிர்வாகிகளை குண்டரில் போட வலியுறுத்தி அதில் வெற்றியும் பெற்றது. மேலும் கலைஞர் வளர்த்த தமிழ் மொழி குறித்து வீடியோக்கள் வெளியிட்டு ஒருபுறம் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளது. வீரப்பன் மகள் வித்யா அவர்கள் மாநில இளைஞரணி துணை தலைவராக உள்ளார். இது வட மாவட்டங்களில் பாஜக கல் பாதிக்க ஒரு படிக்கட்டாக அமைந்துள்ளது. பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் அவர்கள் மிக சுறுசுறுப்பாக உள்ளார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியின் அமைப்பினை வலுப்படுத்தி வருகிறார். முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி அண்ணாமலை வருகை பாஜகவை மேலும் வலுப்படுத்தும்.
பா.ஜ.க மூத்த தலைவர்கள் ஏற்கனவே தொகுதி பணிகளில் இறங்கிவிட்டார்கள். தற்போது தமிழக அரசியல் கட்சிகள் உள்ள நிலையில் பாரத்தால் பாஜக சட்டசபை தேர்தல் ரேஸில் முந்தி கொண்டு செல்கிறது, இந்த செய்தி திராவிட கட்சிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.