பாஜக தேசிய மகளிர் அணி தலைவியகா நியமிக்கப்பட்டிருக்கும் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் நேற்று கோவை மாநகர் பாஜக மாவட்ட அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்! அவருக்கு கோவை பாஜக மாநகர் சார்பில் பேரணி மூலம் மிக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு பேரணியில் பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் உள்ளிட்ட பல பா.ஜ.க நிர்வாகிகள் கலந்து கொண்டு வானதி சீனிவாசனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.அப்போது பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் வானதி சீனிவாசனை புகழ்ந்து தள்ளினார்!
அவர் பேசியதாவது :
அகில இந்திய பாஜக கடந்த மாதம் தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தது. அப்போது மகளிர் அணி தலைவரை மட்டும் நியமிக்கவில்லை. இந்தியாவில் 60 கோடி பெண்கள் உள்ளார்கள் 45 கோடி வாக்களிப்பவர்கள் அதில் 20 கோடி பெண்கள் பாஜகவில் உள்ளார்கள். அந்த 20 கோடி பெண்களுக்கு தலைவியாக நியமிக்க இந்தியா முழுவதும் தேடி பார்த்தார்கள். பின் கோவையை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு அந்த பதவி வழங்ப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு தகுதியான பொருத்தமான தகுதியாக இருப்பவர் வானதி சீனிவாசன் அவர்கள்.
வானதி சீனிவாசன் தனது 20 வது வயதில் ஏ.பி.வி.பி மூலம் மக்கள் பணியாற்ற வந்துள்ளார். பின் அரசியல் பிரவேசம் அவர் கல்லுரி கட்டணம் செலுத்த முடியாத நிலைமையில் அவரது தந்தை நிலத்தினை விற்று கல்லூரியில் படிக்க வைத்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தற்போது 20 கோடி பெண்களின் தலைவியாக இருக்கும் வானதி சீனிவாசன் ஒரு இரும்பு பெண்மணி என புகழாரம் சூட்டினார். மேலும் 2021 தேர்தலில் பாஜக மாற்று சக்தியாக உருவெடுக்க வானதி சீனிவாசன் அவர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என தெரிவித்தார்.