தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு அளிக்க அமித் ஷா முடிவெடுத்துள்ளார் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.கவை வலுப்படுத்த தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக பாஜகவிற்கு புதிய இளம் தலைவர் அண்ணாமலை முன்னாள் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வானதி சீனிவாசனுக்கு தேசிய மகளிர் அணி பதவி என தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
தற்போது அரசியலில் அதிரடி காட்டி வருகிறார்கள் தமிழக பா.ஜ.க தலைவர்கள். அண்ணாமலை வானதி சீனிசவாசன் போன்ற தலைவர்கள் Attacking Mode ல் உள்ளார்கள். இது பா.ஜ.கவினரிடையே புது உற்சாகத்தை கொடுத்துள்ளது. சமூக வலைதங்களிலும் வைரல் ஆகி வருகிறது.
அண்ணாமலை தி.மு.கவை மட்டுமல்ல சில நேரங்களில் ஊடங்கங்களை பங்கம் செய்து வருகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் நிகழ்ச்சிகள் என படு பிசியாக உள்ளார். படு வேகமாக செயல்பட்டு வருகிறார். எந்த பிரச்னையையும் திறமையாக கையாள்கிறார்.சிக்கலான விஷயங்களையும் எளிதாக முடித்து வைக்கிறார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணாமலை அவர்களின் செல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.அண்ணாமலையின் செயல்பாட்டால், தமிழக அரசியலில் அவருக்கு அதிக அளவில் எதிர்ப்புகள் உள்ளன. அவர் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது’ என, உளவுத்துறையினர் அமித்ஷாவிற்கு அறிக்கை அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு அளிக்க அமித் ஷா முடிவெடுத்துள்ளார்.