கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான திரு. விஜயகாந்த் அவர்கள் மரணமடைந்தார். இச்செய்தி தமிழகத்தில் பேரிடியாக அமைந்தது. பல நடிகர்கள் விஜயகாந்த் உடலுக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். லட்சக்கணக்கான மக்கள் தங்களின் கண்ணீர் அஞ்சலியை விஜயகாந்த் மறைவுக்கு நேரிடையாக வந்து செலுத்தினார்கள்.
ஆனால் எப்போதும் கருத்து கந்தசாமியாக திகழம் சூர்யாவோ, வெளிநாட்டில் ஓய்வில் இருந்து கொண்டு காரில் சென்று கொண்டே, விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்தார். உண்மையில் அதுவும் நடிப்புதான். உண்மையில் விஜயகாந்த் உடலுக்கு நேரடியாக சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோரால் வந்து அஞ்சலி செலுத்தி இருக்கலாம். அது தான் உண்மை.
இந்த நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் சூர்யா அழுதது நடிப்பு என்று பிரபல யூடுப் விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடுப் சேனலுக்கு பேசுகையில் நடிகர் சூர்யா அவரது குடும்பத்தை கிழித்து தொங்கவிட்டார். “கேப்டன் இறந்து போய்விட்டார். ஒரு மனிதருக்கு இரங்கல் செய்தி எப்படி சொல்ல வேண்டும் என்றால் எப்படி சொல்ல வேண்டும்.
அமைதியாக நிதானமாக சொல்ல வேண்டும். ஆனால், சூர்யா காரில் சென்று கொண்டே, விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்தார். உண்மையில் அதுவும் நடிப்புதான். இதற்குப் பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது சூர்யாவுக்கு கல்யாணம் நடக்கும் பொழுது, அந்த பத்திரிகையை விஜயகாந்திற்கு கொடுப்பதற்காக சிவகுமார் அவருக்கு போன் செய்தார். இதைக் கேட்ட விஜயகாந்த் தயவுசெய்து வர வேண்டாம் நான் கல்யாணத்திற்கு வரவில்லை.
காரணம் நான் அங்கு வந்தால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. காரணம் என்னவென்றால் அங்கு ஜெயலலிதா, கலைஞர் உள்ளிட்ட எல்லாரும் வருவார்கள் என்று சொல்லி இருக்கிறார்.
அதனால் சிவகுமாருக்கு விஜயகாந்தின் மீது கோபம் இருந்தது. அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து விஜயகாந்த் சூர்யாவின் வீட்டிற்கு சென்று ஒரு பொருளை தம்பதிக்கு பரிசாக வழங்கி வந்தார்.
ஆனால் இன்றைக்கு விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நாம் செல்லவில்லை என்றால், நமக்கு கெட்ட பெயர் வரும். நம் மகன்களின் படங்களை மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று பயந்து நடுங்கி அங்கு வந்திருக்கிறார்கள்.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு வரும் நடிகர்கள் அழுகிறார்கள் நடிகர்கள் அழுவதை பற்றி நமக்கு தெரியாதா? உங்களுடைய அப்பா சிவக்குமார் கிளிசரின் போடாமலேயே நன்றாக அழுவார். நீ வீட்டிலிருந்து வரும்போது கிளிசரின் போட்டு வந்து விட்டாயா. `நீ அழுதால் கேப்டன் வந்து விடுவாரா?” என்று பேசி இருக்கிறார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















