நீதிமன்றத்தை நாடி முன் ஜாமீன் ‘வாங்கி’ வழக்கை இழுத்தடித்து வந்த முன்னாள் அமைச்சர் சிதம்பரம் பாணியில் அவரது மகனும் சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் பின்பற்றி வருகிறார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்தது 3 மாதங்களுக்கு மேல் டில்லி திஹார் சிறையில் இருந்த சிதம்பரத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் தான் ஜாமின் கிடைத்தது.
தற்போது மகன் கார்த்தி சிதம்பரம். இவரது மனைவி ஸ்ரீநிதி. இருவரும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015-ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஏக்கருக்கு தலா ரூ.4.25 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். இதில் முறையான வருமான வரி செலுத்தப்படவில்லை என குற்றசாட்டுகள் எழுந்தது.
கார்த்தி சிதம்பரம் குடும்பத்தால் மகாபலிபுரத்தில் விற்கப்பட்ட நிலம் சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் ரூ.3 கோடி என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் ரூ.6.38 கோடியும், அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் ரூ.1.35 கோடியும் வருமான வரி கணக்கில் காட்டவில்லை.அவர்கள் இருவர் மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கானது எம்.பி. எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்கு விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம்,வருமான வரித்துறை நோட்டீஸை ரத்து செய்யக்கோரி, சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், 2014-15, 2015-16 ஆண்டுகளுக்கான வருமான வரி மறுமதிப்பீட்டிற்காக அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்ய மறுத்து விட்டார்.வருமான வரிக் கணக்குகளுக்கான மதிப்பீட்டையும், மறு மதிப்பீட்டையும் துவங்காத நிலையில், வருமான வரித்துறையின் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என நீதிபதி தெரிவித்தார்.எப்படி வெளி வருவது என்று தெரியாமல் முழித்து கொண்டிருக்கிறார் கார்த்திக் சிதம்பரம் குடும்பம்.
2015ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு முட்டுக்காடு நிலத்தை விற்பனை செய்த விவகாரத்தில் 6 கோடியே 38 லட்சம் ரூபாய் வருமானத்தை கார்த்தி சிதம்பரம் மறைத்து விட்டதாக வருமான வரித்துறை குற்றஞ்சாட்டியிருந்தது.