ஒரு விவசாயியின் எதிர்பார்ப்பு அல்லது அவசிய தேவை தன் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதே
அவ்வகையில் நல்ல விலை எப்பொழுது கிடைக்கும் என்றால் தேவை அதிகமாக இருந்தால் மட்டுமே நல்ல விலை கிடைக்கும்
உள்நாட்டு தேவை ஒரு அளவுக்கு மேல் கைகொடுக்காது, மிகபெரிய தீர்வு ஏற்றுமதிக்கு திறந்துவிடுவது, அப்படி செய்யும் பொழுது தேவை அதிகரிக்கும் விளைபொருளின் விலை அதிகரிக்கும்
உற்பத்தி செய்யும் விவசாயி அப்பொழுதுதான் வாழமுடியும்
இப்பொழுது பஞ்சாபிய விவசாயிகளிடம் ஒரு தெளிவு இல்லை அந்த குழப்பத்தை தமிழகம் மேலும் பரப்ப விரும்புகின்றது திமுக
கவனியுங்கள்
விவசாயி ஒரு உற்பத்தியாளன், ஜவுளி போல, மோட்டார் வாகனம் போல அவன் வயல் ஒரு உற்பத்தி தொழிற்சாலை
விளைபொருளின் விலை உயர்ந்தால் அது அவனுக்கு நல்லது, ஆனால் ஏதோ அவனே அவன் விற்பதை வாங்குவது போல அலறுவதுதான் விசித்திரம்
உண்மையில் இந்த சட்டத்துக்கு பொதுமக்களும் வியாபாரிகளுமே பொங்கி இருக்க வேண்டும் ஆனால் அவர்களோ மகா அமைதி, பின்னும் ஏன் விவசாயிகள் பொங்குகின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை
இச்சட்டம் வியாபாரிகள் விவசாயிகளை ஏமாற்றுவதை தடுத்து விவசாயிகள் நேரடியாக பொருளை விற்க வழி செய்கின்றது, இதற்கு விவசாயிகளுக்கு வருமான வரியும் இல்லை
காய்கறி பழம் போன்றவற்றை நிச்சயம் வியாபாரி பதுக்க முடியாது. ஏற்றுமதி இருந்தால் அதற்கான விலை விவசாயியினை வந்தடையும்.
எண்ணெய் வித்துக்கள் தானியம் உள்ளிட்டவைகளை வியாபாரிகள் பதுக்கமுடியும் என்றால் 2012ல் பருப்பின் விலை என்ன? இன்று விலைகுறைவு எவ்வளவு?
மோடி அரசு அந்த சாதனையினை செய்தது மறுக்க முடியுமா?
அந்த பருப்பு விலை வீழ்ச்சியால் விவசாயிக்கு பருப்பு விவசாயமே நடக்காமல் போய்விட்டதா என்றால் இல்லை, மேட்டையும் பள்ளத்தையும் சமன் செய்தது மோடி அரசு, யாவரும் நலம்
இப்பொழுது விவசாயி பொருளின் விலை அதிகரிக்கத்தான் அது பாடுபடுகின்றது, காலமெல்லாம் இலவச மின்சாரம், இலவச உரம், இலவச சாப்பாடு என அவர்களை அரசியல் அடிமைகளாக வைக்க மோடி அரசு விரும்பவில்லை
உனக்கான விலையினை உயர்த்தி தருகின்றேன் பிழைத்து கொள் என்பதுதான் அரசின் திட்டம்
இதற்குத்தான் வரிந்து கட்டி போராடுகின்றனர் பஞ்சாபிய விவசாயிகள்
விசித்திரமானவர்களாக இருப்பார்கள் போலிருகின்றது, உலகிலே தன்னை வாழவைக்கும் சட்டத்துக்கு எதிராக ஒப்பாரி வைக்கும் ஒரே கூட்டம் அவர்கள்தான்
சர்தார்ஜி காமெடிகள் என ஒருபிரிவு காமெடியே உண்டு, அதெல்லாம் நிஜம்தான் போலிருக்கின்றது
சட்டம் இன்னும் நடைமுறைபடுத்தபடவில்லை, அதன் சாதக பாதகமெல்லாம் இன்னும் உணர்ந்து பார்க்கவில்லை
அதற்குள் ஒரே அழிச்சாட்டியம் என்றால் அவர்கள் ஒருமாதிரி ஆட்கள் போல
வடக்கே தாடிவைத்த சிங்குகள் என்னை கவுரவமாக வாழவிடாதே நான் அடிமையாக இலவச விரும்பியாகவே இருப்பேன் என அடம்பிடிக்க, தமிழ்நாட்டில் தாடி இல்லாத சிங் ஒருவர் அதற்கு ஆமாம் போட்டு கொண்டிருக்கின்றார்
அவர் பெயர் மு.க ஸ்டாலின், அன்னார் வேளச்சேரியில் மிகபெரிய விவசாயி என்பது குறிப்பிடதக்கது.