“தடுப்பூசி கட்டாயம் கிடையாது. தாமாகவே முன்வந்து செலுத்திக் கொள்ளவும்.” – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு.”தடுப்பூசி போடாதவர்களுக்கு லாக்டௌன்” என்று கூகுளில் தேடினால் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என அத்தனை வெள்ளைக்கார தேசத்தையும் கூகுள் காட்டுகிறது!”தடுப்பூசி போட்டவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாதபோது, எதற்காக இப்படி தடுப்பூசி போடாதவர்களுக்கு ‘மட்டும்’ லாக்டௌன்?” என்ற கேள்விக்கு, “தடுப்பூசி போடாதவர்களால் கொரோனாவைரஸ் பரவலை தடுக்க (to curb the spread of coronavirus)” என்கிறார்கள் (https://tinyurl.com/2p8cb766) . “தடுப்பூசி போட்டவர்களால் கொரோனாவைரஸ் பரவாதா?” என்று கேட்டால் நம்மை anti-science என்று சொல்லுவார்கள். என்றாலும், இந்த ஓமிக்ரான் வைரஸ் வகை முதல் முதலில் பரவ காரணமாக இருந்தவர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர். (https://tinyurl.com/f8tutaw2) .
“தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் வைரஸை பரப்ப மாட்டார்கள்” என்பது உண்மையில்லை. அவர்களும் – தடுப்பூசி போடாதவர்களைப் போல – வைரஸை பரப்புவார்கள். ஆனால், (இந்திய) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், அவர்களுக்கு பாதிப்பு குறைவு. தடுப்பூசி போடாதவர்களுக்கு பாதிப்புக்கான வாய்ப்பு அதிகம். அவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் கட்டாயம் ஏற்படலாம். அதோடு, ஏற்கனவே கொரோனா தொற்று வந்தவர்களுக்கு எதிர்ப்பு சக்தி இருக்கும். கொரோனா வராதவர்களுக்கு கூட இயற்கையான எதிர்ப்பு சக்தி இருக்கும். இதையெல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபித்து – அவர்களு எதிர்ப்பு சக்தி இல்லை என்று காட்டினாலொழிய – எவரையும் நிர்பந்திக்க முடியாது. எனவே, அறிவில்லாத ஊடகங்கள் உட்பட பலரும், “தடுப்பூசி போடாதவர்களால் வைரஸ் பரவும், அவர்களுக்கு லாக்டௌன் போடவும்” என்பதை நிறுத்திவிட்டு, “தடுப்பூசி போடாதவர்களால் மருத்துவமனையில் தேவையில்லாத பளு அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதால், அவர்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரவும்” என்று ராகத்தை மாற்றிப்பாடலாம்.
இந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் பிரஷாந்த் பூஷன் (அதே இந்தியாவிரோதி தான்) உச்சநீதிமன்றத்தில், “மாநில அரசுகள் தடுப்பூசி போடாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது” என தொடுத்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு, “தடுப்பூசி கட்டாயம் கிடையாது. தாமாகவே முன்வந்து செலுத்திக் கொள்ளவும். இந்திய தடுப்பு மருந்துகளால் அபாயம் ஏதுமில்லை என்பதை தரவுகள் காட்டுகின்றன. எனவே, தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது” என்று பதிலளித்து விவரங்களை கொடுத்திருக்கிறது @ https://tinyurl.com/yckw4hjj .அமெரிக்கா – ஐரோப்பாவில் உபயோகிக்கும் ஃபைசர் உள்ளிட்ட mRNA தடுப்பு மருந்துகள் மீது அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அங்கே ஊசி போட்டவர்கள் தான் அதிகம் சாகிறார்கள் என்று பலர் ஆதாரங்களோடு கூறுகிறார்கள்.
இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் தடுப்பூசியை கட்டாயமாக்கி, மக்களை கடுப்பாக்கி, மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளன அந்த நாட்டு அரசுகள். இங்கே தடுப்பு மருந்தை கட்டாயமாக்காமல், மக்களுக்கு அதன் பலனை எடுத்துச் சொல்லி, அவர்கள் சம்மதத்தோடு ஊசி போடுகிறது அரசு. இதுவரை 126 கோடிக்கு மேல் தடுப்பு மருந்து பெற்றுள்ளார்கள் இந்தியாவில். இரு டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை 46.8 கோடி. ஒரு டோஸ் மட்டும் – 79.8 கோடி. சாதனை! ஊடகம், அரசியல்வாதிகள் என அத்தனை பேருக்கும் $ஐ அள்ளி வீசி விலைக்கு வாங்கியிருக்கும் ஃபைசரை எதிர்த்து எவரும் பேச மாட்டேனென்கிறார்கள். இந்த திருடனை இந்தியாவுக்குள் நுழைய விடாமல் செய்து நம்மைக் காத்த பெருமை மோதி ஜியை சாரும்!