திருநெல்வேலி மாவட்டம் அருகே உள்ள முருகன் குறிச்சியில் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை முகமது அன்சாரி என்ற மாற்று மதத்தினர் முத்தையா என்ற பினாமி பெயரில் எடுத்து அசைவ உணவு ஹோட்டல் கட்ட அனுமதியளித்த இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும் முறையற்ற பினாமி குத்தகையை ரத்து செய்ய வலியுறுத்தியும்இந்துமுன்னணி சார்பில் குழியில் இறங்கி முற்றுகை போராட்டம் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் கா.குற்றாலநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்து அறநிலைய துறையின் இந்த சம்பவம் நெல்லை வாழ் இந்துக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது இதன் காரணமாக அறநிலையத்துறையின் இந்த கீழ்த்தரமான செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துக்கள் உள்ளம் குமுறினர். இதையடுத்து அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்துமுன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட செயலாளர் சுடலை உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து குற்றாலநாதன் கூறுகையில், அறநிலையத்துறை விதிமுறைகளில், நிலத்தை வேற்று மதத்தினருக்கோ, உள்குத்தகைக்கோ விடக்கூடாது. அசைவ ஓட்டல், இறைச்சிக்கடை அமைக்கக் கூடாது. மீறினால் குத்தகை ரத்தாகும். செலுத்திய தொகை திரும்ப கிடைக்காது என விதிமுறைகள் உள்ளன. மீறி அசைவ ஓட்டல் கட்ட முயற்சித்தால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.
முன்னதாக, திருநெல்வேலியில் கோயில் நிலத்தில் அசைவ ஓட்டல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை முகமது அன்சாரி என்ற வேற்று மதத்தினர் முத்தையா என்ற பினாமி பெயரில் எடுத்து அசைவ உணவு ஹோட்டல் கட்ட அனுமதியளித்த இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும் முறையற்ற பினாமி குத்தகையை ரத்து செய்ய வலியுறுத்தியும் என்று இந்து முன்னணியினர் போராட்டம் நடைபெறும் என ஏற்கனேவே அறிவித்திருந்தனர்.
அதன் படி, திங்கள் கிழமை (15.6.2020) மாலை 4 மணி அளவில், பாளை முருகன்குறிச்சி சத்யா ஏஜென்ஸி அருகில் இந்துமுன்னணியினர் குழிக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















