டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத்..சர்வதேச அளவில் இயங்கும் ஒன்று..என்றும்..இங்கு வருடம் முழுவதும் வெளிநாட்டினரும் வந்து கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருப்பது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஜமாத்தில்.. மார்ச் 17-19 நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 3400 பேர். இதில் வெளிநாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் இருந்து சென்று இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பலருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ..வைரஸ் தொற்றுக்கான முதன்மை இடமாக தப்லிக் ஜமாத் கூட்டம் இருந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
மார்ச் மாத ஆரம்பத்திலேயே வைரஸ் பரவலை தடுப்பதற்கான மும்முரமாக நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன.கூட்டமாக கூடுவதை தவிர்க்க சொல்லி மத்திய அரசு நிர்வாகம் ஆரம்பித்து ஊரக உள்ளாட்சி நிர்வாகம் வரை அறிவுறுத்த ஆரம்பித்து விட்டன.
CAA எதிர்ப்பு போராட்டங்களை நிறுத்துமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மார்ச் 10-11 ம் தேதிகளிலேயே..ஒவ்வொரு மாநிலமாக …பள்ளி தேர்வுகளை ரத்து செய்து. 9-ம் வகுப்பு வரை தேர்வு இன்றி all pass என்று அறிவிக்க ஆரம்பித்து விட்டன.
மார்ச் 1 முதலே..குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.மார்ச் 12-லேயே 580 சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது.ஜனவரி முதல் மெதுமெதுவாக ஆரம்பித்த வைரஸ் தடுப்பு நடவடிக்கை ..மார்ச் முதல் வாரத்தில் நாடு முழுவதும் கவனம் பெற்ற விழிப்புணர்வு அடைந்த..மனிதர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டிய நடவடிக்கையாக மாறி இருந்தது.
இருப்பினும்..இங்கு..”வெளிநாட்டினர் கலந்து கொள்ளும்” கூட்டம் நடந்தேறி இருக்கிறது !இத்தனை முன் நடவடிக்கைகள், ..தொடர் அறிவுறுத்தல்கள் , நடவடிக்கைகளுக்கு பிறகு தான் மார்ச் 19-ம் தேதி பேசிய பிரதமர் ..மார்ச் 22 ஞாயிற்றுக் கிழமை அன்று ஒரு நாள் ‘மக்கள் ஊரடங்கை’ [ Janta Curfew] கடைபிடிக்குமாறு அறிவுறுத்துகிறார்.அரசு தரப்பிலிருந்தும், பதிலாக தப்லிக் ஜமாத் தரப்பிலிருந்தும் எழுதப்பட்ட கடிதங்கள் காணக் கிடைக்கின்றன.
அதே மார்ச் மத்தியில் தான் திருப்பதி கோவில் விழாவிலும் பெரும் கூட்டம் கூடியது என்று எதிர் கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. இத்தகைய கூட்டங்களும், கூடுகைகளும் தடுக்கப்பட வேண்டியவை தான். மகா தவறு தான்.
ஆனால் இக் கேள்வியில் ..ஒரு அடிப்படையான விஷயம் மறக்கப்படுகிறது.இந்தியாவில் வைரஸ் தொற்று பரவுதலுக்கு மிக முக்கிய காரணம் ”வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்”. குறிப்பாக சீனா, தாய்லாந்து, இந்தோனேஷியா, இரான், துபாய்..இன்ன பிற மத்திய கிழக்கு நாடுகள்.
இத்தகைய வெளிநாட்டாரோடு தொடர்பில் உள்ளவர்களும், இவர்களோடு சேர்ந்து மத கூட்டங்களில் கலந்து கொள்ளும்போதும், இன்ன பிற கூட்டங்களில் கலந்து கொள்ளும் போதும்… வைரஸ் பரவல் அதிகரிக்கிறது என்பது தான் களம் காட்டும் எதார்த்தம்.
இப்பொது…மத்திய மாநில அரசுகள், காவல்துறையினர், மாநகராட்சி/ நகராட்சி/ ஊரக/ உள்ளாட்சி நிர்வாகத்தினர் உட்பட பெரும் படை .. தொற்று இருக்கும் & இருக்கக்கூடிய நபர்களை தேடி..நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்! இது ..தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதை!
மத்திய & மாநில அரசுகள் ..ஆரம்பத்திலேயே .. கடுமையாக எச்சரித்து கூட்டங்களை தடுத்து நிறுத்தி இருந்தால்..இப்போது ஓடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.வாக்குவங்கி அரசியலுக்காக இவர்களை தூண்டிவிட்டுக் கொண்டிருந்த கட்சிகள் எதுவும்..இம் மக்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் தொற்று பரவுதலுக்கு பொறுப்பு ஏற்குமா? என்றால் அதுவும் இல்லை !
இத்தகைய பாதிப்பு ஏற்படும் என்று அப்போதே எச்சரித்தவர்கள் அரசு உட்பட லட்சக்கணக்கானவர்கள் உண்டு.வெறுப்பு அரசியலில் ஈடுபடும் இஸ்லாமியர்களுக்கும், அவர்களை தூண்டிவிட்டுக் கொண்டிருந்த எதிர் கட்சிகளுக்கும் தான் இந்த நிலைக்கு முக்கிய பொறுப்பு.
சமூக ஆர்வலர் : பானுகோம்ஸ்