உலகமே தற்போது இந்தியாவின் இஸ்ரோவை பற்றித்தான் பேசுகிறது. உலக நாடுகளின் பார்வை தற்போது சந்திராயன் 3 மீது தான். சந்திரயான் 3 நிலவில்அடுத்தடுத்து நகர்வுகளை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. நிலவின் தென் துருவ பகுதியில் நீர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நீரிலிருந்து ஹைட்ரஜனை தனியாக எடுத்து எரிவாயுவாக பயன்படுத்தி அங்கிருந்து வேறு கிரகங்களுக்கு செல்லலாம். எனவே நிலவை ஆக்கிரமிக்க உலக நாடுகள் மீண்டும் போட்டிப்போட தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் தான் உலக நாடுகள் வியக்கும் வகையில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா L1 எனும் விண்கலத்தை விண்வெளிக்கு விரைவில் அனுப்ப இருக்கிறது இஸ்ரோ. சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் சூரிய திட்டம் தான் இந்த ஆதித்யா-எல்1 அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
வரும் காலங்களில்சூரியனிலிருந்து வெளிவரும் காந்த புயல் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. காந்த புயல் உருவானால் பூமியில் இருக்கும் அனைத்து மின்னணு சாதனங்களையும் செயலிழக்க வைத்துவிடும். இன்றைய காலகட்டத்தில் இந்த உலகமே மின்னணு சாதனங்களை நம்பி தான் இயங்கிக்கொண்டிருக்கிறது.
மேலும் முக்கியமாக மின்னணு சாதனங்கள் மூலமாகதான் நூற்றுக்கணக்கான அணு உலைகளும் இயங்கிவருகிறது. இந்த நிலையில் காந்த புயல் உருவானால் பேரழிவு ஏற்படும். எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் இந்த ஆதித்யா L1 எனும் புதிய விண்கலம் அனுப்பப்பட இருக்கிறது.
இந்தியா சார்பில் முதன் முதலில் சூரியனுக்கு அனுப்பப்படும் முதல் விண்கலம். தற்போதுதான் நிலவிற்கு சந்திராயன்3 அனுப்பியுள்ளது இஸ்ரோ அடுத்த மாதமே சூரியனுக்கு விண்கலமா என மூக்கு மேல் விரலை வைத்துள்ளது உலக நாடுகள். எனவே உலக நாடுகள் இதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இது ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ கூறியுள்ளது. இனி எதிர்காலமே சூரிய ஒளியாக கூட இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறி வரும் நிலையில் இஸ்ரோவின் இந்த ஆதித்யா L1 விண்கலம் குறித்த எதிர்பார்ப்பு தீவிரமடைந்து வருகிறது.