உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க நடத்தாத காரணத்தால் ₹2577 கோடி இழப்பு! தேர்தல் நடத்த கூடாதுனு தடை வாங்குனதே தி.மு.க தான்!

நேற்று வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியது இதை சுட்டிக்காட்டவே இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வந்தாலும் அந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம், தொழிற்சாலைகள் கொண்டுவந்தால் போராட்டம் எனதி முக மற்றும் போராளிகள் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு இருக்கும் சமூகவிரோதிகள் போராடினார்கள். இதனால் பல தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வரவில்லை.

இதே போல் நேற்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தாததால் தமிழக அரசுக்கு ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராகத்தான் இருந்தது ஆனால் நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடியது திமுக. இப்பொது அதிமுக மீது குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது.

ஊரக உள்ளாட்சிகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டுமான தேர்தல்கள் 27 மற்றும் 30 டிசம்பர் 2019 ஆகிய நாட்களில் இரண்டு கட்டத் தேர்தலாக நடத்தப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஊரக உள்ளாட்சிகளின் தேர்தல்கள் முழுமையாக முடிந்ததும் 15 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளுக்கான தேர்தல்கள் 2020 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செய்திக் குறிப்புகள் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. திமுக தொடர்ந்த வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் புதிதாக நிறுவப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களுக்கான தேர்தல் அறிவிக்கையை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் 8 டிசம்பர் 2019 அன்று வெளியிட்டது. இதனால் முந்தைய தேர்தல் அட்டவணை நீக்கி ஆணையம் உத்தரவிட்டது

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் நிதி இழப்பிற்கு திமுகதான் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதை ஊடகங்கள் விவாதிக்குமா?

Exit mobile version