உலகில் தூதரகங்கள் விசா மட்டும் கொடுக்கும் என நினைத்திருந்தால் அது தவறு, விசா கொடுப்பது அவர்களின் பல வேலைகளில் ஒன்று, மிக முக்கியமான வேலை உளவு பார்ப்பதும் உள்நாட்டு கலவரங்களை ரகசியமாக தூண்டிவிடுவதுமாகும்
ஒரு நாட்டின் தூதரகத்தினுள் சம்பந்தபட்ட நாட்டின் அதிகாரம் செல்லாது, அது தனி உலகம் என்பதால் பாதுகாப்புகள் அதிகம், அந்த தைரியத்தில் உளவு வேலைகள் சாதாரணமாய் நடக்கும்.
ஈரானின் கோமேனி இதனால்தான் அமெரிக்க தூதரகத்தை அடித்து துரத்தினார், இன்றுவரை அங்கு அமெரிக்க தூதரகம் கிடையாது
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர், பிரிட்டிஷ் தூதர்கள் சில நேரம் திராவிட கட்சி தலமைகளை சந்திப்பது ஒன்றும் ரகசியம் அல்ல, ஏன் என்றால் அதுதான் அரசியல்
அட அவ்வளவு ஏன்? முக ஸ்டாலின் மிசாவில் இருந்தாரா இல்லையா என்பதற்கு, அமெரிக்க தூதரகம் அனுப்பிய ஆதாரங்கள் செய்தியாக வந்தது. முக ஸ்டாலின் என்ன உலக தலைவரா? இல்லை வடகொரிய ராக்கெட் விஞ்ஞானியா?
இல்லை, ஆனால் தமிழ்நாட்டில் எப்படி எல்லாம் குழப்பம் உண்டு, யாரை வைத்து எப்படி இந்திய அரசுக்கு தலைவலி கொடுக்கலாம் என அவர்கள் அப்படியெல்லாம் செய்தி திரட்டியிருக்கின்றார்கள்
இப்பொழுது டெல்லியில் உள்ள பாகிஸ்தானிய தூதரகத்தில் இருந்த இருவரை கையும் களவுமாக பிடித்து உளவு குற்றசாட்டை சொல்லிவிட்டது இந்தியா, அவர்கள் அதிகாரிகள் என்பதால் கைது செய்ய முடியாது இதனால் ஒரே நாளுக்குள் நாடு கடத்த சொல்லிவிட்டது
பாகிஸ்தான் விமானம் வராத பட்சத்தில் இருவரும் வாகா அல்லது சியால்கேட் பகுதியில் வைத்து பாகிஸ்தானிடம் ஒப்படைக்கபடுவார்கள் அல்லது வெளியே தள்ளி கேட்டை மூடிவிடும் இந்தியா
இனி பாகிஸ்தான் என்ன செய்யும்?
அங்கிருக்கும் இந்திய தூதரகத்தில் வாட்ச்மேன் வேலை பார்க்கும் யாரையாவது அல்லது அப்பக்கம் இந்திய பாஸ்போர்ட்டோடு சுற்றி திரியும் ஒருவரை பிடித்து இங்கே அனுப்பி சீரியசாக முகத்தை வைத்து கொள்ளும்.
கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.