நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஆக்லாந்தில் உள்ள ராதா கிருஷ்ணா கோயிலுக்குச் சென்று சாமி தரிசணம் செய்து, பின்னர் இந்திய பாரம்பரிய உணவான பூரி மசால் சாப்பிட்டார்.
நியூசிலாந்து பிரதமரும் ,அந்நாட்டு தொழிலாளர் கட்சியின் தலைவருமான 40 வயது ஜசிந்தா ஆர்டெர்ன் 2017 லிருந்து அந்நாட்டு பிரதமராக இருந்து வருகிறார் .செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேசியத் தேர்தல்களுக்கு முன்னதாக ஆக்லாந்தில் உள்ள புகழ்ப்பெற்ற இந்து கோயிலுக்கு சென்றார் .
கோயிலுக்குள் நுழையும் முன் ஜெசிந்தா தனது காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி விட்டு ராதா கிருஷ்ணா கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஜெசிந்தாவுக்கு கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது. ஜெசிந்தா இந்திய உணவான பூரி மசால் மற்றும் தால் சாப்பிட்டுயுள்ளார்.
கோயிலுக்கு வெளியே அவர் பூட்ஸை கழற்றியது தெரிந்தது.
கோயிலில் வழிபட்ட வீடியோவையும் ஜெசிந்தா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட அதை இந்தியர்கள் பகிர்ந்து வருகின்றனர்.” திறமையான ஆளுமை மிக்கத் தலைவர்… அனைத்து கலாசாரத்தையும் மதிக்கக தெரிந்த தலைவர் உங்களை கடவுள் ஆசிர்வாதிப்பார்” என்று ஜெசிந்தாவுக்கு இந்தியர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். நியூசிலாந்து பிரதமர் இந்து கோயில் சென்று வழிபட்டது அந்த நாட்டில் வாழும் இந்தியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. பிரதமர் ஜெசிந்தாயுடன் இருந்த நியூசிலாந்து இந்திய தூதரக அதிகாரி முக்தேஷ் பர்தேஷியும் டுவீட் செய்துள்ளார்.
நியூசிலாந்தில் கொரோனா பரவலை தன்னுடைய திறமையால் சிறப்பாக கையாண்டு கட்டுப்படுத்தி உலக நாடுகளின் பாராட்டைப் பெற்ற ஜசிந்தா ஆர்டெர்னை மக்கள் கொண்டாடி வரும் நிலையில, கடந்த மூன்று மாதங்களாக நியூசிலாந்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.