டெல்லியில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கையும் அது தொடர்பான சோதனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தெற்கு டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனை சோதனை நடத்தியதில் சுமார் 1700 கிலோ போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார் என பிடிபட்ட தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தியதில், தமிழகத்தை சார்ந்த ஜாபர் சாதிக்என்பவரே கடந்த மூன்று ஆண்டுகளாக போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவனாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. அவர் திமுகவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாது தனது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்த போதை பொருள் கடத்தலில் அவர் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளிப்பியுள்ளது.
ஏனென்றால் கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் இருந்துள்ளார். இந்த கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது கூட்டாளியான முகமது சலீம் விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்தவர். இன்னொரு சகோதரரான மைதீன் ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், சுமார் 3,500 கிலோ போதைப் பொருள்களை, 45 முறை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும் அதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை, போதைப் பொருள்கள் மூலம் இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. கடத்தலில் பிடிபட்ட மெத்தாபெட்டமைன் என்ற போதை பொருள் ஒரு கிலோ சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மெத்தாபெட்டமைன் என்கிற போதைப்பொருளை தயாரிப்பதற்கான முக்கிய வேதிப்பொருளாக சூடோபெட்ரைன் பயன்படுத்தப்படுகிறது. இந்த போதைப்பொருள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு அதிகளவில் கடத்தப்பட்டுள்ளது.
போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து, தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கிய மங்கை எனும் திரைப்படத்தை ஜாபர் சாதிக் தான் தயாரித்துள்ளார், மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம், தமிழக அரசு நிவாரண நிதியாக பணத்தை வழங்கி புகைப்படங்களும், எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் கடத்தல் தலைவனின் தம்பியும் கூட்டாளியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் என்பவர், விசிக தலைவர் திருமாவளவன் அவர்களிடம் கட்சி நிதி வழங்கியுள்ள புகைப்படங்களும், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும், தமிழ்த் திரைத் துறையில் பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இவர்கள் நெருங்கியத் தொடர்பில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை கிளிப்பியுள்ளது. டிஸ்மிஸ் செய்யப்பட்ட தற்போது டிஜிபி ஆக உள்ள சங்கர் ஜிவாலுடன் எடுத்த போட்டோ தான் ஹாட் டாபிக்.
தற்போது, திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருந்தவரே இத்தனை ஆண்டுகளாக சென்னையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பதும் இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்காது குறித்தும், பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.போதைப் பொருள் கடத்தல் விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ட்விட்டரில் போதைகடத்தல்திமுக என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது மேலும் நெட்டிசன்கள் திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
யார் இந்த ஜாபர் சாதிக் : ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக், 36. இவர், சென்னை புரசைவாக்கத்தில் விடுதி வைத்து நடத்துகிறார். பிரபல அசைவ ஹோட்டல் ஒன்றின் புரசைவாக்கம் கிளையையும் எடுத்து நடத்தும் சாதிக், தி.மு.க., முக்கிய தலைவர்கள் பலருடன் நெருக்கமான நட்பில் இருந்தார். சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க.,வின் முக்கிய புள்ளி வாயிலாக, கட்சியின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் பதவியை பெற்ற சாதிக், கட்சி மேலிடத்தில் இருப்போர் பலருடனும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் திரைத் துறையில் காலடி எடுத்து வைத்த சாதிக், அங்கிருக்கும் பிரபலமான நபர்களுடனும் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டார்; திரைப்படம் தயாரிக்கும் பணியிலும் இறங்கினார். மங்கை என்ற திரைப்படம் எடுத்து வரும் அவர், படத்துக்கான முதல் பாடல் வெளியீட்டு விழாவுக்கு, இயக்குனர் கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட தி.மு.க., பிரபலங்களையும் அழைத்திருந்தார். கட்சிக்கும், ஆட்சிக்கும் பல கட்டங்களில் தாராளமாக நிதி வழங்கியதால், ஜாபர் சாதிக்குக்கு அனைத்து மட்டங்களிலும் தொடர் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.