சென்னையில் நடந்த போராட்டத்தில், நாட்டிற்கு எதிராக இஸ்லாமியர்களை தூண்டிவிடும் வகையில் பாதிரியார் ஜெகத் கஸ்பர் பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
பா.ஜ., செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா டிவி விவாதத்தின் போது, முஸ்லிம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை கைது செய்ய வலியுறுத்தி உ.பி.,யில் பிரயாக்ராஜ், சஹாரான்பூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு போலீசார் இடித்தனர். இதனை கண்டித்து, சமீபத்தில் சென்னை எழும்பூரில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டியக்கம் சார்பில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பாதிரியார் ஜெகத் கஸ்பர் பேசியதாவது: இஸ்லாமிய சமூகம் சந்திக்கும் இவ்வளவு வெறுப்புகளை, எந்த சமூகமும் சந்தித்து இருக்க மாட்டார்கள். வார்த்தை சார் வன்முறைகள், எதார்த்தத்தில் நிராகரிப்பு, எதார்த்தத்தில் புறக்கணிப்பு என்ற அவமதிப்பை 20 ஆண்டுகளாக முஸ்லிம் சமூகம் சந்தித்து வருகிறது. அப்பட்டமாக, அரசியல் சட்டமே, தனி மனிதனுக்கு உரிய உரிமையை மீறும்போது நீதிமன்றம் பொறுமையாக கையாள்கிறது. உலகளாவிய அனைத்து சக்திகளையும் தொடர்பு படுத்தி கொள்ளுங்கள்.
ஆர்எஸ்எஸ் இந்த நாட்டை ஆளும் என்றால் அவர்களுக்கு அடி பணிய தயாராக இல்லை. நுபுர் சர்மா விஷயத்தில் ஓஐசி எனப்படும் 57 இஸ்லாமிய நாடுகள் குரல் கொடுத்த உடன், இந்தியா ‘ஜெர்க்’ ஆகியதை கவனித்தீர்களா? இல்லையா? ‘ஜெர்க்’ ஆனதா ? இல்லையா? இஸ்லாமியர்கள் அரசியல் சட்டத்தின் சட்டத்திற்கு உட்பட்டு வாழ்வார்களே தவிர ஆர்எஸ்எஸ் சட்டத்திற்கு உட்பட்டு வாழ வேண்டும் என்பது கிடையாது. அந்த இடத்தில் மீறியிருக்க வேண்டியதும், அந்த இடத்தில் மீறலுக்கான ஆதரவை உலகின் யாரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். அரசியல் சட்டம் ஆர்எஸ்எஸ் கையில் சிக்கியுள்ள போது உலக நாடுகளின் ஆதரவை கேட்பது தவறில்லை. தேச விரோத செயலல்ல. நாட்டை காப்பதற்கு, யாருடைய உதவியையும் நாடலாம் .
57 நாடுகளுக்கும் செல்லுங்கள். அவர்களை கொண்டு ஐ.நா.,வில் ஆர்எஸ்எஸ்சின் நீண்ட கால பயங்கரவாதம் பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கொண்டு வாருங்கள். 20 சதவீதம் இஸ்லாமிய மக்கள் கேட்டால், தமிழகம் ஆந்திரா தெலுங்கானா கர்நாடக அளவு நிலம் வந்துவிடும். எங்களுக்கு 20 சதவீத நிலம் பிரிச்சு கொடுத்துடுங்க என்று கேளுங்கள். முடியவில்லை என்றால் சகாரா பாலைவனத்தை பிரித்து கொடுங்கள்.
நிம்மதியாக வாழ விடுங்கள் எனக் கூறுங்கள். முஸ்லிம்கள் குறைந்த பட்சம் தனி ஓட்டுரிமை கேளுங்கள். ஆடிப்போவாங்க . அத்தனை கட்சியும் ஆடிப்போவார்கள். அம்பேத்கர் அதனை கேட்டார். தனித்தொகுப்பு தேர்தல் முறை தேவை என கேளுங்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
நாடு பிரிவுபட்டபோது இஸ்லாமியர்களுக்கு தனி தேர்தல் முறை வேண்டும் என முகம்மது அலி ஜின்னா தான் கேட்டார். அம்பேத்கர் கேட்கவில்லை. இதையும் கஸ்பர் தவறாக குறிப்பிட்டார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















