நடிகர் சூர்யாவும், அவரது மனைவி ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ஜெய் பீம். சமீபத்தில் கார்ப்பரேட் ஒடிடி மூலம் வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ளார்.மேலும் உண்மை கதைக்களம் கொண்ட இந்த படம் சித்தரிக்கபட்டு உண்மையை மறைத்து எடுக்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கும் பட்டியலின மக்களுக்கும் இடையே சாதிய மோதலை உண்டாக்கும் விதமாக எடுக்கப்பட்ட படம் தான் இந்த ஜெய் பீம்.
இந்த திரைப்படம் அப்பாவி மக்களின் பார்வையில் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள ஒரு திரைப்படம் என்றுதான் தோன்றும். ஆனால் இதன் பின்னணியில் எவ்வளவு பெரிய சதித் திட்டம், திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது என்பது சற்று ஆழமாக சிந்தித்தால் புலப்படும். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவை கொண்டாடும் வகையிலும், கம்யூனிஸ்ட் கட்சியை தூக்கிய நிறுத்துகின்ற வகையிலும் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம். வழக்கிற்காக போராடிய கோவிந்தன் படையாச்சியை இருடடிட்ப்பு செய்துள்ளது இந்த ஜெய் பீம் . இதன் பின்னணியில் மிகப் பெரிய சதி வலை பின்னப்பட்டுள்ளது. இதில் பாதிரியார்களின் பங்கும், இந்து விரோதிகளின் பங்கும் முக்கிய இடம் பிடித்துள்ளன என்ற சந்தேகம் எழுந்துள்ளது. .ஏன் என்றால் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி அந்தோணி சாமி துணை ஆய்வாளர் என்ற கதாபாத்திரத்தை குருமூர்த்தி என சொல்லியுள்ளது.
இது குறித்து ருத்ர தாண்டவம் இயக்குனர் ஜெய் பீம் படம் குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்துளார்.
அவர் கூறியதாவது :
“பாதிக்கப்பட்ட ராஜாக்கன்னு என்ற குரவர் சமூகத்தை சார்ந்த மனிதருக்காக களத்தில் போராடி திருமணம் கூட செய்யாமல் உடன் நின்றவர் வன்னியர் இனத்தை சேர்ந்தவர்.. மேலும் உடன் நின்ற தலைவர் பாலகிருஷ்ணன் ஐயா வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்.
ஆனால் திரைப்படத்தில் கொலை செய்த அந்தோனிசாமி என்ற பெயரை குருமூர்த்தியாக மாற்றி வன்னியர் சமூக அடையாளம் கொண்டு காட்டியதில் உள்ளது உள்நோக்க அரசியல்.. #ஜெய்பீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னவர்கள் அதை பின்பற்றவும் வேண்டும்”
நிஜ சம்பவத்தில் வக்கீலாக பணியாற்றியவர் சந்துரு. இந்த திரைப்படத்திலும் அந்த கதாபாத்திரத்தின் பெயர் சந்துருவாகவே பயன்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்தில்தான் சூர்யா நடித்துள்ளார். அதேபோல கொலை செய்யப்பட்டவர் ராஜாக்கண்ணு. திரைப்படத்திலும் அவரது பெயர் ராஜா கண்ணுவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொலையாளி கிறிஸ்தவரான அந்தோணிசாமியின் பெயர் மாற்றப்பட்டு இந்து பெயரான குருமூர்த்தி என்று திணிக்கப்பட்டுள்ளது. அதோடு அவரது வீட்டில் வன்னியர் சமுதாய குறியீடுகளை கேலண்டர் மூலம் திட்டமிட்டு வெளிப்படுத்தி உள்ளனர்.