வன்னியர்கள் மீது வன்மத்தை கக்கி உள்ளது ஜெய் பீம் திரைப்படம் – நடிகர் சூர்யாவின் திட்டமிட்ட பித்தலாட்டம் அம்பலம்!
=====
நடிகர் சூர்யாவும், அவரது மனைவி ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ஜெய் பீம். சமீபத்தில் ஒடிடி மூலம் வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவும் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் அப்பாவி மக்களின் பார்வையில் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள ஒரு திரைப்படம் என்றுதான் தோன்றும். ஆனால் இதன் பின்னணியில் எவ்வளவு பெரிய சதித் திட்டம், திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது என்பது சற்று ஆழமாக சிந்தித்தால் புலப்படும்.
ஓய்வுபெற்ற கம்யூனிஸ்ட் நீதிபதி சந்துருவை கொண்டாடும் வகையிலும், கம்யூனிஸ்ட் கட்சியை தூக்கிய நிறுத்துகின்ற வகையிலும் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சாதிய பாகுபாடை திணித்துள்ளது இந்த திரைப்படம். வழக்கிற்காக போராடிய கோவிந்தன் படையாச்சியை இருடடிட்ப்பு செய்துள்ளது இந்த ஜெய் பீம் . இதன் பின்னணியில் மிகப் பெரிய சதி வலை பின்னப்பட்டுள்ளது. இதில் பாதிரியார்களின் பங்கும், இந்து விரோதிகளின் பங்கும் முக்கிய இடம் பிடித்துள்ளன.ஏன் என்றால் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி அந்தோணி சாமி துணை ஆய்வாளர் என்ற கதாபாத்திரத்தை குருமூர்த்தி என சொல்லியுள்ளது.
1993-ஆம் ஆண்டு, கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ஒன்றியம் கம்மாபுரம் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட குறும்பர் சமுதாயத்தை சேர்ந்த ராஜாக்கண்ணுவின் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
கம்மாபுரம் அருகே உள்ள சிறிய கிராமம் முதனை. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. இவர் பட்டியலின சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய குறும்பர் ஜாதியை சேர்ந்தவர். இவரை சித்தரவதை செய்து காவல்நிலையத்தில் கொலை செய்த சப் இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமி. இவரும் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்தான்.
எனவே காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டவரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். அதேபோல அவரை கொலை செய்த அந்தோணிசாமியும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். ராஜாக்கண்ணு இந்து. அந்தோணிசாமி என்பவர்.
நிஜ சம்பவத்தில் வக்கீலாக பணியாற்றியவர் சந்துரு. இந்த திரைப்படத்திலும் அந்த கதாபாத்திரத்தின் பெயர் சந்துருவாகவே பயன்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்தில்தான் சூர்யா நடித்துள்ளார். அதேபோல கொலை செய்யப்பட்டவர் ராஜாக்கண்ணு. திரைப்படத்திலும் அவரது பெயர் ராஜா கண்ணுவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொலையாளி கிறிஸ்தவரான அந்தோணிசாமியின் பெயர் மாற்றப்பட்டு இந்து பெயரான குருமூர்த்தி என்று திணிக்கப்பட்டுள்ளது. அதோடு அவரது வீட்டில் வன்னியர் சமுதாய குறியீடுகளை கேலண்டர் மூலம் திட்டமிட்டு வெளிப்படுத்தி உள்ளனர்.
அதாவது பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த ராஜாக்கண்ணுவை, வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து, கொலை செய்து உள்ளார் என்று ரசிகர்களுக்கு காட்டி உள்ளனர்.
பட்டியிலின சமுதாய மக்களுக்கு வன்னிய சமுதாய மக்கள் எதிரிகள் என்பது போல் சித்தரித்து உள்ளனர்.இது சாதி பிரச்சனைகளை உருவாக்கும் விதமாக படமாக்கப்பட்டுளது .
ஆனால் உண்மை சம்பவத்தில் ராஜாக்கண்ணுவின் கொலைக்கு நீதி கேட்டு நீண்ட நெடிய போராட்டம் நடத்தியவர் கோவிந்தன் படையாச்சி . ராஜகண்ணுவுக்கு நீதி கிடைத்த பிறகே திருமணம் செய்வேன் என்று சபதம் ஏற்றவர். 2006-ஆம் ஆண்டு நீதி கிடைத்த பிறகு, தனது 39-வது வயதில்தான் திருமணம் செய்து கொண்டவர்.
இந்த கோவிந்தன் என்பவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
இதேபோல இந்த வழக்கில் நியாயம் கிடைக்க போராடியவர்கள் பெரும்பாலானவர்கள் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இந்துக்கள்.
உண்மை கதை இப்படி இருக்க, கொலையாளியை வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவராக, தவறாக சித்தரித்து ஒட்டுமொத்த தமிழர்களையும் திசை திருப்பி உள்ளனர் சூர்யாவும், ஜோதிகாவும்.
படம் முடிந்த பிறகு பல பாதிரியார்களுக்கு நன்றி தெரிவிக்கப்படும். இந்த நன்றி அறிவிப்பு கார்டுதான், முதலில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பாதிரியார்களுக்கும், இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுவது இயல்பானது. ஒருவேளை நிதி உதவி செய்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. அதற்கு நன்றிக்கடனாகத்தான் கொலையாளி கிறிஸ்தவ அண்தோணி சாமியை, இந்து குருமூர்த்தியாக மாற்றியதாகவும் சொல்கிறார்கள்.
எது எப்படியோ திட்டமிட்டு இந்து விரோதத்தையும், வன்னிய சமுதாய விரோதத்தையும் இந்த படத்தில் ஒரு சேர திணித்து உள்ளார்கள் என்பது அப்பட்டமான உண்மை.
தெளிவடைய வேண்டியவர்கள் ரசிகர்களாகிய நாம்தான். வீடியோ பார்க்க : https://www.youtube.com/watch?v=xH5up0EnJ6I
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















