பிரபல நடிகர் சூர்யா தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஒரு கோடி ரூபாய் வழங்கியது. தனது சொந்த பணம் அல்ல என பிரபல அரசியல் விமர்சகர் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
உண்மையை தழுவி எடுக்கப்பட்ட படத்தில் உண்மை சம்பவத்தில் அந்தோணி சாமி என்ற கேரக்டரை பெயரை ஏன் குரு என சித்தரித்தும் அவர் வீட்டில் வன்னியர்கள் அடையாளமான அக்னி கலசம் இடம்பெற்றது போல் ஒரு காட்சி வைரலாக பரவியது. இது வன்னியர் மக்களிடையே மிகப்பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது பின் வன்னியர்களின் கடும் எதிர்ப்பை கருத்தில் கொண்டு பணிந்தது ஜெய் பீம் பட குழுவினர்.
ஆனால் வில்லனை இந்துவாக சித்தரிப்பதில் குறிக்கோளாக உள்ளது இந்த ஜெய் பீம் படக்குழு .வன்னியர் அடையாளம் அக்னி கலசம் இருந்த காலண்டருக்கு பதிலாக கடவுள் லட்சுமி படம் வைக்கப்பட்டுளது. இருப்பதற்கு இந்து மக்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது, இந்து மக்களை பட்டியலின மக்களுக்கு எதிராக காண்பிக்க வேண்டும் என்ற ரீதியில் வேண்டுமென்றே மத சாயம் பூசி சர்ச்சையை கிளப்பியுள்ளார் சூர்யா. இது போன்ற விமர்சனங்கள் அதிகரித்துள்ள சூழலில் தற்போது பாஜக செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமன் ஜெய் பீம் குறித்து தெரிவித்துள்ள கருத்து :-
அந்த நடிகர் சூர்யாவினுடைய படத்தில் , இந்து அடையாளங்களை பல இடங்களில் மாற்றியும், கொச்சைப்படுத்தியும் தங்களுடைய வன்மத்தைக் காட்டியுள்ளார்கள். உண்மையில் கொலை செய்யப்பட்ட ராஜாகண்ணு வின் மனைவியின் பெயர் பார்வதி ! இந்து அடையாளம் வந்துவிடும் என்பதால் அது வேண்டுமென்றே செங்கேணி என மாற்றப்பட்டுள்ளது.
உண்மையில் செங்கேணி என்பதுவும் இந்துத்துவ பெயர் தான். சம்புவராயர் வம்சத்தில் முக்கிய பெயர் செங்கேணி ! ஆனாலும் பார்வதி என்பது பலராலும் அறியப்பட்ட இந்து பெயர் என்பதால் அது மாற்றப்பட்டுள்ளது. படத்தில் ஒரு சர்ச்சைக்குரிய மெடிக்கலுடைய பெயர்” ஓம் ” என்று வைக்கப்பட்டுள்ளது.
இப்போது வில்லன் வீட்டு காலண்டரில் படத்தை மாற்றவேண்டும் என கட்டாயம் வரும்போது அது லட்சுமி காலண்டராக காட்டப்படுகிறது. உண்மையில் முன்பு இருந்த அக்னி குண்டம் கூட இந்து அடையாளம் தான் ! ஜம்புமகா ரிஷி வளர்த்த யாகத்திலிருந்து ருத்ர வன்னியர் உருவானதாக இந்து தர்மத்தின் 18 புராணங்களில் ஒன்றான அக்னி புராணம் கூறுகிறது. அதுதான் வன்னியர் சங்கத்தினுடைய அடையாளமாக மாறியது.
இந்த சமூகத்தில் மதமாற்றம் மிக குறைவாக இருப்பதால் , இயல்பாகவே மதமாற்ற மாபியாக்களுக்கு இந்த சமூகம் மீது வன்மம் இருப்பது இயல்பு தான். அந்த வன்மம் தான் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராடிய சமுதாயத்தையே வில்லனாக சித்தரிக்கசெய்கிறது !
மதமாற்ற மாபியா களுக்கு நெருங்கிய தொடர்புடைய இந்த படத்தினுடைய தயாரிப்பாளர் இதை எல்லாம் ஏன் செய்தார் என்பது உள்ளங்கை நெல்லக்கனி . இவர் இருளர் சமுதாயத்திற்கு 1 கோடி கொடுத்ததாக சொல்வதும் நம்பர் 1 டுபாக்கூர் தான். அவர் அந்த மக்களுக்கு கொடுக்கவில்லை. ஒரு மிஷனரி NGOக்கு தான் கொடுத்தார். அதாவது அங்கிருந்து வாங்கி அங்கேயே கொடுத்துள்ளார்.
இந்த சதி எல்லாம் வெளி உலகிற்கு தெரியாது. இவ்வளவு ஏன் ? அப்பாவி கிருஸ்தவர்களுக்கே கூட தெரியாது. மதமாற்ற மாபியா வேறு அப்பாவி கிருஸ்தவர்கள் வேறு எனவும் அஸ்வத்தாமன் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்பொழுது.
பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் நடிகர் சூர்யா அண்மையில் நடித்து வெளியாகி திரைப்படம் ’ஜெய் பீம். தமிழக முதல்வர் ஸ்டாலின் சூர்யாவின் நடிப்பிற்கும், திரைப்பட குழுவிற்கும் தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா முதல்வரை சந்தித்து, பழங்குடி சமுதாய மக்களின் மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாய் வழங்கி இருந்தார். இதற்கு பிரபல அரசியல் விமர்சகர் சூர்யாவிடம் சில கேள்விகளை முன் வைத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்து உள்ளார்.
இந்த பழங்குடி இருளர் சமூகத்திற்கு 1 கோடி நன்கொடை கொடுத்ததில் ‘திராவிடத்தனம்’ பண்ணியிருக்கார். அந்த 1 கோடி சூர்யாவின் சம்பள பணமோ, 2D தயாரிப்பு நிறுவனத்தின் சொந்த பணமோ அல்ல. சரியான குழந்தைகளை தேர்ந்தெடுத்து தன்னார்வலர்கள் துணையுடன் சிறப்பான முறையில் படிக்க வைப்பார் என்று பொதுமக்கள் அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்த பணத்தை சூர்யா தன்னுடைய திரைப்பட விளம்பரத்திற்கு பயன்படுத்தி கொண்டார்.
சோலையில் இருக்கும் ‘PAZHANKUDI IRULAR EDUCATIONAL TRUST’ என்ற பெயரில் NGO அரசு இணைய தளத்தில் இல்லை. இது புதிதாக தொடங்கபட்டதா? இன்னும் பதிவு செய்யபடவில்லையா ?அதன் நிர்வாகிகள் யார் யார் ? போன்ற பல சந்தேகங்கள் எழுகிறது, இதை சூர்யா தெளிவு படுத்த வேண்டும். மேலும்,IRULAR என்ற வார்த்தை பெயரில் கொண்ட அறக்கட்டளை இந்தியாவில் எங்கும் இல்லை. அகரம் பவுன்டேசன் நிர்வாகி TJ ஞானவேல் தான் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் என்பது கூடுதல் தகவல். இவர் வேறு Studio Green ஞானவேல்ராஜா வேறு.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















