பாஜக தேசியச் செயலாளர் சுனில் தியோதர் கண்டனம்.
- ஜகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான ஆந்திர மாநில அரசு திருமலா-திருப்பதி தேவஸ்தானத்தின் பக்தர்கள் அளிக்கும் பணம், சொத்துக்களைத் தன் உபயோகத்துக்குக் கொண்டு வருவதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
- தேர்தலில் வெல்வதற்காக இந்துவைப் போல் வேடமிட்ட ரெட்டியின் அரசு, அரசுப் பணத்தில் இருந்து இந்துமத விரோதிகளான முல்லாக்களுக்கும், கிறிஸ்தவப் பாதிரிகளுக்கும் சம்பளம் அளித்து வருகிறது. ஆனால் மாநிலத்தில் உள்ள சர்ச்சுகள், பள்ளிவாசல்களின் வரவு-செலவுகளில் தலையிடுவதோ, அவற்றைச் செலவுகளுக்கு எடுப்பதோ இல்லை.
- ரெட்டி அரசின் அமைச்சர் நாராயணசாமி இந்துக்களின் வைகுண்ட ஏகாதசித் திருநாளன்று திருமலா-திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் இருந்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கூறியது அநீதி, கடும் கண்டனத்துக்குரியது.
- இதே ரெட்டியோ, ரெட்டி அரசின் அமைச்சர்களோ கிறிஸ்துமஸ் அன்று சர்ச்சுகளிலோ, இஸ்லாமியப் பண்டிகைககளின் போது பள்ளிவாசல்களில் இருந்தோ இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்களா?
- ஆந்திரப் பிரதேசத்தில் 400 வருடங்கள் பழமையான ராமர் சிலை கழுத்து துண்டிக்கப் பட்டதைக் கண்டித்து நாட்டில் எந்தச் சர்ச்சோ, மசூதியோ, பாதிரியோ, முல்லாவோ வாயைத் திறந்தனரா? அல்லது இந்துவிரோத மதச்சார்பின்மைப் பேர்வழிகள் இதைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஊர்வலம் போனார்களா?
- அடுத்து ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் பாஜக அரசு அரசுப் பணத்தில் இருந்து முல்லாக்களுக்கும், பாதிரிகளுக்கும் கூலி தருவதைத் தடை செய்யும். இந்துக் கோயில்கள், இந்துக் கலாசாரத்திற்கு எந்தத் தீய சக்திகளாலும் பாதிப்பு வராமலிருக்கத் தகுந்த வழிவகை செய்யும்.