தெற்கு கள்ளிகுப்பம் சர்ச் விவகாரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் சர்ச் நிர்வாகத்தினருக்கு கொலைப்மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் வள்ளியூர் பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தெற்கு கள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் ஜோசப் பெல்சி இவர் ராதாபுரம் திமுக ஒன்றிய மேற்கு பகுதி செயலாளராக உள்ளார். இவரது சகோதரர் மருத்துவர் ஆனந்த். இவர் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த பனிமயமாதா ஆலயத்தின் தர்மகர்த்தாவாக உள்ளார்.
ஆனந்த். கடந்த மூன்று ஆண்டுகளாக கோவில் தர்மார்த்தமாக உள்ளார். அடுத்த மாதம் தர்மகர்த்தா பதவியானது முடிவடைகிறது. இந்நிலையில்பனிமயமாதா ஆலயத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தி புதிய தர்மகர்த்தா நியமிக்க வேண்டும் என தேவாலதின் ஒரு தரப்பினர் கூறிவந்த நிலையில் இது தொடர்பாக ஜேசுராஜ்க்கும் திமுக ஒன்றிய செயலாளரின் சகோதரர்களுக்கும் இடையே பூசல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எதிரணியை சேர்ந்த ஜேசுராஜா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் திமுக ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தார் வள்ளியூர் காவல் துறையில் தன் மீது ஏராளமான பொய் புகார்களை கொடுப்பதாகவும் அவற்றை நிறுத்த கோரியும் ஜோசப் பெல்சி அவரது சகோதரர் டாக்டர் ஆனந்த் மற்றும் பெஸ்கி ஆகியோரால் தனது உயிருக்கு ஆபத்து எனக்கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை விடுத்துள்ளார். திமுக ஒன்றியச் சாளரின் குடும்பம் தன்னை மிரட்டுவதாக கூறி வாலிபர் வீடியோ வெளியிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















