ஜேஎன்யூவில்(J N U) மாற்றத்தின் அறிகுறி-

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் ராமாயணத்தில் இருந்து தலைமை பண்பு என்கிற பெயரில் பாடங்கள் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

ஒரு நாட்டை அடிமைப்படுத்த வேண்டும் என்றால் அந்த நாட்டின் பண்பாடு கலாச்சாரம் முதலில் அழிக்கப்பட வேண்டும். இது தான் முதல் பாடம்.

முகலாயர்களின் வாளினால் அழிக்க முடியாத இந்திய பண்பாடும் கலாச்சாரமும் ஆங்கிலேயர்களினால் தான் அழிய ஆரம்பித்தது.

உலகின் பெரும்பாலான நாடுகளில் தனது அடிமை ஆட்சியை கொண்டு வந்த இங்கிலாந்து இந்தியாவில் மட்டும் தான் அதனை சுலபமாக செயல்படுத்த முடியாமல் தடுமாறியது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் பண்பாடும் கலாச்சாரமும் தான்.

நம்முடைய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் குருகுல கல்வி முறைதான் பாரதம் முழுவதுமாக எடுத்து சென்றன.

1850 களில் இந்தியா முழுவதும் சுமார் 3 லட்சம் திண்ணைப்பள்ளிக்கூடங்கள் இருந்தன.சென்னை மாகாணத்தில் மட்டுமே சுமார் 12,000 பள்ளிகள் இருந்ததாக அப்போதைய ஆளுநர் தாமஸ் மன்றோ கூறி இருக்கிறார்.

குரு குல கல்வி முறையில் நடைபெற்ற இந்த திண்ணை பள்ளிக்கூடங்கள் ஆசிரியரின் வீட்டு திண்ணைகளில் நடைபெற்றதால் திண்ணைப்பள்ளிகள் என்று கூறப்பட்டன.இதில் அனைத்து பிரிவு மாணவர்களும் படித்து வந்தார்கள்.

வேத சாஸ்திரங்கள், யோகா ,அரசியல், அரச தந்திரம், இதிகாசம், புராணம், ஜோதிடம், வானவியல், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் பொது அறிவு போன்ற பல கல்விகளை பல மொழிகளில் திண்ணைப்பள்ளிகள் மாணவர்களுக்கு
கற்று கொடுத்ததால் இளம் வயதிலேயே மாணவர்கள் அறிவாளிகளாக பல மொழிகளை அறிந்து இருந்தார்கள்.

பல மொழிகளில் கற்பிக்கப்பட்டு வந்த நம்முடைய இதிகாசங்களும் புராணங்களும் நம்மை ஒருமைப்படுத்தி நம்முடைய பண்பாட்டை பல தலைமுறைகளை கடந்தும் வேர் பிடித்து வளர வைத்தது.

இதற்கு வேட்டு வைத்தவர் தான் மெக்காலே. இந்தியாவை தொடர்ந்து அடிமை படுத்தி வைத்து இருக்க வேண்டும் என்றால் அதன் கல்வி.முறையை அழிக்க வேண்டும் என்று இங்கிலாந்து அரசுக்கு ஆலோசனை கூறி அதை செயல்படுத்தி இந்திய பண்பாடு கலாச்சாரம் போதித்த குரு குல கல்வியை அழித்து இன்றைய கல்வி முறையான மெக்காலே கல்வி முறையை
உருவாக்கியவர்.

பலமொழி கல்வி அழிந்தது. புராணங்களும் இதிகாசங்களும் கல்வியில் இருந்து விலகியது. மெக்காலே கல்வி பயில வந்தவர்களுக்கு மாக்ஸ்முல்லரும் கால்டு வெல்லும் போதிக்கப்பட்டார்கள். ஜெர்மனியில் இருந்து வந்த மாக்ஸ்முல்லர் வேதங்கள் இந்தியாவுக்கு வெளியில்
இருந்த வந்த ஆரியர்களால் உருவாக்கப்பட்டது என்று புது கதையை எழுதினார்.

அயர்லாந்தில் இருந்து வந்த கால்டுவெல் ஆரியர்களால் அடித்து துரத்தப்பட்டவர்கள்தான் திராவிடர்கள் என்று புது கதையை கூற ஆரம்பித்தார். 5000 வருடங்களாக இந்தியாவில் வேரூன்றி இருந்த பாரத பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் 150 வருடங்களுக்கு முன் இந்தியாவில் பஞ்சம் பிழைக்க வந்த நாதாரிகள் மாற்றி எழுத ஆரம்பித்தார்கள்.

பல்லாயிரம் வருடங்களாக எங்களின் அடையாளமாக இருக்கும் எங்களின் பண்பாடும் வரலாறும் நேற்று இந்தியாவுக்குள் நுழைந்த மேக்ஸ் முல்லருக்கும்,கால்டு வெல்லுக்கும் எப்படிப்பா தெரியும் என்று யாரும் கேள்வி கேட்க வில்லை.

ஏனென்றால் மெக்காலே கல்வி மூலமாக இதிகாசங்களும், புராணங்களும் மறைந்த பிறகு மேக்ஸ் முல்லரும் கால்டுவெல்லும் இந்திய கல்வியின் அடையாளமாக மாறிய பிறகு அவர்களுக்கு வேறு எதை பற்றி அறிய முடியும்?

திருக்குறள் உருவாகி ஒரு இரண்டாயிரம் வருசம் இருக்குமா?
இரண்டடி உள்ள ஒரே ஒரு குறளுக்கு தமிழ் அறிஞர்களே ஆளாளுக்கு ஒரு விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

பரிமேலழகர், மு.வரதராசனார், அடுத்து கருணாநிதி, சாலமன் பாப்பையா என்று ஆளாளுக்கு ஒரு கருத்தை அடித்து விட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் ஜெர்மானிய மாக்ஸ் முல்லர் ரிக் வேதத்தில் கூறப்பட்ட ஆரிய தஸ்யூ போராட்டத்தை கைபர் போலன் கணவாய் வழியாக மாடு மேய்த்து கொண்டு இங்கு வந்தவர்களுக்கும் இங்கே இருந்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டம் என்று கூறியது எந்த விதத்தில் உண்மையாக இருக்க முடியும்?

அயர்லாந்தில் இருந்து வந்த கால்டுவெல் அங்கிருந்த தஸ்யூக்கள் தான் திராவிடர்கள். அவர்களை எங்கிருந்தோ மாடுகளை மேய்த்து வந்த ஆரியர்கள் அடித்து தெற்கு நோக்கி துரத்தி விட்டார்கள் என்று இங்கு அள்ளி விட்டார். அவர்களின் நோக்கம் இந்தியா கலாச்சார ரீதியாக பிரிய வேண்டும் என்பதே..

உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஆப்பிரிக்க நாடுகளிலும் இதே கதை உண்டு.
ருவாண்டா நாட்டில் துட்சி என்கிற மக்களும் ஹூட்டு இன மக்களும் உண்டு
இதில் துட்சி இன மக்கள் ஹூட்டு இன மக்களை விட அறிவாளிகள். அதனால் அவர்கள் தான் அதிகாரத்தில் இருந்தவர்கள்

இந்தியாவை இங்கிலாந்து அடிமை படுத்தி வைத்தது மாதிரி ருவாண்டாவை ஜெர்மனி அடிமை படுத்தி வைத்து இருந்த்து. அப்பொழுது ஒற்றுமையாக இருந்த துட்சி இன மக்களும் ஹூட்டு இன மக்களையும் பிரித்தால்தான் ருவாண்டாவை தக்க வைக்க முடியும் என்று நினைத்த ஜெர்மனியர் துட்சி இன மக்கள் இங்குள்ள பூர்வீக குடியினர் கிடையாது என்றார்கள் .

எத்தியோப்பியாவில் இருந்து ஆடு மாடுகளை மேய்த்து கொண்டு இங்கு வந்து உங்களை அடிமை படுத்தினார்கள் என்று அள்ளி விட ஹூட்டு இன மக்களும் அதை நம்பி துட்சி இன மக்களை வெறுத்து ஒதுக்கி ஜெர்மானியர்களின் பேச்சை கேட்க ஆரம்பித்தார்கள்.

ஜெர்மனியர்களும் ஹூட்டுகளிடம் நீங்கள் சமுதாயத்தில் உயர வேண்டும் என்றால் கிறிஸ்தவர்களாக மாறுங்கள் என் று கூற அவர்களும் கிறிஸ்தவர்களாக மாற ஜெர்மானியர்களுக்கு பலம் கூடி ருவாண்டாவை எந்த வித எதிர்ப்பும் இன்றி கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள்.

ஆக ஒரு நாட்டை அடிமை படுத்தி தொடர்ந்து ஆள வேண்டும் என்றால் முதலில் அவர்களை கலாச்சார ரீதியாகவும் இன ரீதியாகவும் பிரிய வைக்க வேண்டும் என்பது காலணி ஆதிக்கத்தின் எழுதப்படாத விதி்.

இதற்கு தான் கல்வியை இந்தியாவில் பயன்படுத்தினார்கள் ஆங்கிலேயர்கள்.அவர்களுக்கு பிறகு காங்கிரஸும் கம்யூனிசமும் தங்களின் அரசியல் லாபத்திற்காக கல்வி நிலையங்கள் மூலமாக இந்தியர்களின் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் அழிக்கும் வகையில் கல்வியை மாணவர்களிடத்தில் ஜேஎன்யூ மாதிரி கல்வி நிலையங்களில் புகுத்தி விட்டது்.

ஆனால் காலம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா?


அது இப்பொழுது பிஜேபியின்கைகளில் இருக்கிறது. அதனால் இடது சாரி சிந்தனைகளின் பிடியில் சிக்கி தேச விரோத கும்பலின் அடையாளமாக இருக்கும் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தை திருத்தி அவர்களை இந்திய பண்பாட்டையும், வரலாற்றையும் அறியும் வண்ணம் இந்திய பண்பாட்டின் அடையாளமாக இருக்கும் ராமாயணத்தில் இருந்து லீடர்சிப் பாடங்கள் ஆரம்பிக்கப்படுகிறது.

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version