சமீப காலத்தில், திரைப்படத் துறையை சார்ந்தவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர் . இக்கருத்துக்கள் பெரிய அளவில் ஹிந்து மத நம்பிக்கையினை புண்படுத்தும் விதமாகவே உள்ளன..இப்பதிவின் வாயிலாக நாங்கள் நமது சக ஹிந்து சகோதரர்களுக்கும், பெரிய அளவில் மேடைகளில் ஹிந்து மத நம்பிக்கையினை புண்படுத்தும் திரைத்துறையினருக்கும்… சில உண்மைகளை நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம்
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து புகழ் பெற்ற 44,121 திருக்கோவில்களும், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இத்திருக்கோவில்கள் யாவும், “The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act, 1959” வாயிலாக நிர்வகிக்க படுகின்றன. இதில்
Sec 36 – “Utilization of surplus funds”,(உபரி தொகையின் பயன்பாடு )
Sec 36-A A “Utilisation of surplus funds for Hindu Marriages”.
Sec 38 “Enforcement of service or charity in certain cases”.
Sec 41 “Resumption and re-grant of inam granted for performance of any charity or service”.
இப்பிரிவுகளின் கீழ் காலம் காலமாக (60 வருடமாக) இக்கோயில்களில் இருந்து கிடைக்கும் உபரி தொகையினை பள்ளிகள் கல்லூரி வளாகங்கள், மருத்துவமனைகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மேலும் கோவில் நிலங்கள் சமூக பயன்பாட்டிற்காக தானம் செய்யப்பட்டு, மத பேதமின்றி லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இத்திருக்கோவில்கள், வழிபாட்டு தலங்களாக மட்டும் விளங்காமல், நம் தமிழரின் பண்பாடு, கலை மேம்போக்கு, சமூக ஒற்றுமை, மற்றும் நம் முன்னோர்களின் கட்டட கலையின் வல்லமை, இதை பாதுகாக்க அவர்கள் செய்த உயிர் தியாகங்களை உலகிற்கு எடுத்து காட்டும் அடையாள சின்னமாக திகழ்கிறது.
ஹிந்துக்கள் ஆகிய நாம், இதை பராமரித்து பாதுகாப்பது நம் உரிமை மற்றும் தலையாய கடமையும் ஆகும்.கேளிக்கைக்கு விருது பெரும் இவர்கள், சர்ச்சையை உண்டாக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தில், நிதர்சனமான உண்மையினை, கைத்தட்டலுக்காக மடமையாக திரித்து கூறுகின்றனர்.
திரைத்துறையை சார்ந்தவர்கள், அவர்கள் வரிஏய்ப்பு செய்யும் நோக்கத்திற்காக தொடங்கியதே அவர்களது அறக்கட்டளை (ஒரு சில உண்மை நெஞ்சங்களைத் தவிர) அதில் செய்யும் தானங்களை தம்பட்டமும் அடித்து கொள்கின்றனர்.”தொண்டு சிறிது சுயநலம் இருந்தாலும் மாசுபடும்.” சிறிதும் சுயநலம் இல்லாமல் தொண்டு செய்யும் ஹிந்து கோவில்களை இழிவு படுத்த வேண்டாம் என்று எங்களின் இருகரம் கூப்பி வேண்டிக்கொள்கிறோம்.உங்களின் சமூக கருத்தினை தெரிவிக்கும்பொழுது நடுநிலை மாறாமல் இருப்பது நன்று. மற்ற மதத்தில் நடக்கும் அக்கரமங்களை தெரிவிப்பது எங்கள் எண்ணமன்று…
மேற் கூறிய கூற்றின் ஆதரங்களை பின்வருமாறு தெரிவிக்கிறோம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலின் சமூக தொண்டுகள் ….
- தேவஸ்தானம் நிர்வகிக்கின்ற ஆதவற்றோர் குழந்தைகள் காப்பகம், மாற்று திறனாளிகளின் காப்பகம்(
காது கேளாதோர் வாய் பேசாதோர்) - இலவச கல்வி,புத்தகம், உணவு, தாங்கும் விடுதிகள் மற்றும் மருத்துவ உதவி
- முதியோர் காப்பகம்
- தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் “தேவார இசை பள்ளியின்” வாயிலாக நமது நாயன்மார்களின் தமிழ்த் தேவார பாடல்களைபப் பாடும் ஓதுவார்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
- குழந்தைகள் காப்பகம், வேத சிவ ஆகம பள்ளி, தேவஸ்தான மருத்துவமனை, பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் , Arulmigu Palani Āndavar English Medium School For Children
மேற்கொடுத்த பட்டியல் யாவும் சிறு துளிகளாகும், இது போன்று 20000+ மேற்பட்ட கோவில்கள் கண்ணுக்கு புலப்படாத சமூக தொண்டினை செய்து வருகின்றன, இவை அனைத்தையும் பட்டியல் போட நாங்கள் தயார்.. … உங்களின் அறியாமை திரையினை விலக்கி உண்மையை காண நீங்க தயாரா?? … காலம் காலமாக திருத்தொண்டு, சமுக தொண்டு, சமூக நீதி இவை யாவும் எங்கள் மரபில் இருந்துவருகின்றது, எங்களுக்கு இதைச் செய்ய யாரும் அறிவுரை கூறவோ, நினைவு படுத்தவோ வேண்டாம்.. !
வாழ்க பாரதம்…. வாழ்க திருக்கோவில்…. வளர்க திருத்தொண்டு!
வலது சாரி சிந்தனையாளர் !