கோவை மாணவி பொன்தாரணி தற்கொலை வழக்கில் அவர் எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில் மூன்றாவதாக குறிப்பிடப்பட்ட இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போக்சோவில் கைது செய்தனர் காவல் துறை. மேலும் தலைமறைவாக இருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனையும் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
முதலாவதாகவும்,இரண்டாவதாகவும் குறிப்பிட்டுள்ள ரீடா வோட தாத்தா யார்? எலிசா சாருவோட அப்பா யார்.?அந்த மாணவி குறிப்பிட்டுள்ள இவர் இருவர்களை பற்றி யாருமே எதுவுமே பேசாதது ஏன்..? எப்போது கைது செய்யப்படுவார்கள் என கேள்வி எழுந்துள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயின்ற பொன்தரணி என்ற மாணவிக்கு, அப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்த மிதுன் சக்கரவர்த்தி என்பவன் பலமுறை பாலியல் தொல்லை கொடுததுள்ளார்.பின் அந்த பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு மாற்றினார்கள் பெற்றோர்கள். கடும் மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வக்கிரபுத்தி கொண்ட அந்த ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளிலும் தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற பிரிவிலும் என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அவனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
இந்த நிலையில், ஆசிரியரால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி ஏற்கனவே தனியார் பள்ளியின் முதல்வராக இருந்த மீரா ஜாக்சனிடம் புகாரளித்ததாகவும், ஆனால், அவர் நடவடிக்கை எடுக்காமல் கண்டு கொள்ளாமல் இருந்தததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சனையும் தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கையை அடுத்து, மாணவியின் உடலை பெற்றோர், உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். பிரேத பரிசோதனை முடிந்து 3 நாட்களாக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சனிடம் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துணை ஆணையர்கள் உமா, ஜெயச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது வேறு மாணவிகள் யாரேனும் புகார் அளித்தார்களா?, பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகாரளிக்க பள்ளியில் கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறதா? தற்கொலை செய்து கொண்ட மாணவியின் கடிதத்தில் இடம்பெற்றுள்ள பெயர்கள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்ட கோவை மாணவி பொன்தாரணி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டுவருவதாக கூறப்படும் நிலையில் அக்கடிதத்தில் முதலாவதாகவும், இரண்டாவதாகவும் குறிப்பிட்டுள்ள ரீடா வோட தாத்தா யார்? எலிசா சாருவோட அப்பா யார்.?
அந்த மாணவி குறிப்பிட்டுள்ள இவர் இருவர்களை பற்றி யாருமே எதுவுமே பேசாதது ஏன்..?என்ற கேள்வி மேலோங்கியுள்ளது.
கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் மிகப்பெரிய அளவில் கண்டங்கள் குவிந்தன. அதன் பின் பொன்தாராணியின் கடிதம் கைப்பற்றபின் சத்தமில்லாமல் அடங்கி செல்கிறார்கள் ஏன்? குற்றம் செய்தவர்கள் அனைவரும் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான் காரணமா?
இதே போல் சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி விஷயத்தில் விடிய விடிய பிரேக்கிங் நியூஸ் லைவ் ஒளிபரப்பு செய்த ஊடகங்களும் திருச்சி பிஷப் கல்லூரியில் நடந்த பாலியல் அத்துமீறலை கண்டுகொள்ளவில்லை. கனிமொழி அவர்கள் உன்மையாக பெண் சமூகத்திற்கு குரல் கொடுப்பவர் என்றால் ஏன் பிஷப் கல்லூரிக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
இந்த வழக்கில் தொடர்புடைய குறிப்பாக கடிதத்தில் இடம்பெற்ற அனைவரையும் கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் மேலும் அவர்களின் முழு விபரங்களையும் மக்களிடம் கூறவேண்டும் அப்போதுதான் தவறு செய்தவர்கள் குறித்து மாணவர்களும் பெற்றோரும் அறிந்து கொள்ள உதவும் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.