ஜோதிகா என்ற தனி நபரால் வழங்கங்கப்படாத இந்த நிதி உதவி அகரம் பவுண்டேசன் என்ற டிரஸ்ட் மூலம் வழங்கப்பட்டுள்ளது .தனிநபர்கள் ,பல்வேறு நிறுவனங்களால் நிதி உதவி பெற்று தான் நன்கொடை வழங்கப்படுகிறது .இதை வைத்து ஜோதிகாவின் இந்த விளம்பரம் உதவியை மீடியாக்கள் முதன்மைப் படுத்துகிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம்
ஆச்சி மசாலா நிறுவனம் ,நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் அஜீத் குமார் போன்றோர் செய்த நிதி உதவிகளை எந்த ஒரு ஊடகமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை . நடிகை ஜோதிகா செய்த உதவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்களின் சுயரூபத்தை புரிந்து கொள்ள முடியாமல் மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
புதிய கல்வி கொள்கை, மற்றும் EIA பற்றி எந்தவித புரிதலும் இல்லாமல் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்தது. ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடிகை ஜோதிகா அண்மையில் தமிழர்களின் அடையாளமான தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசியது என்று தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் சூர்யா குடும்பம்.இந்த நிதி உதவியை ஏன் உயிர்கொல்லி கொரானா ஏப்ரல், மே மாதங்களில் கொடுக்காமல் ,இப்போது தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள ஜோதிகா முயற்சித்துள்ளார் .
மக்களின் கவனத்தை திசை திருப்பவும், சூர்யாவின்சூரரைப்போற்று படத்தை விளம்பரப்படுத்தவும் , தஞ்சை மருத்துவமனையின் அவலத்தை பார்த்த அன்றே உதவிகள் செய்யாமல். நடிகை ஜோதிகாவின் இந்த உதவியை ஏன் இந்த ஊடகங்கள் தூக்கி பிடிப்பது ஏமாற்று வேலை என்று சமுக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.