தமிழகத்தினை பொறுத்தவரையில் மோடி அரசினை குறி சொல்லவில்லை என்றால் தமிழக அரசியல்வாதிகளுக்கு தூக்கம் வராது. அப்படிப்பட்ட நோய் தமிழக அரசியல்வாதிகளுக்கு தொற்றியுள்ளது. நல்லது செய்தால் கூட வரவேற்க மாட்டார்கள். நம்ம ஊரு அரசியல் வாதிகள், வரவேற்றுவிட்டால் குறிப்பிட்ட ஒட்டுகள் கிடைக்காது. அதனால் மோடி அரசினை விமர்சிப்பதை கொள்கையாக வைத்துள்ளார்கள்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்கள், மத்திய அரசு, மோடி, என்றால் மட்டுமே உடனே கருத்து தெரிவிக்கும் தமிழக அரசியல்வாதிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் கரூர் எம்.பி ஜோதிமணி பா.ஜ.க மீது தனது கடும் கோவத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
குஜராத்தில் மாபெரும் தலைவர் சர்தார் படேலின் பெயரில் இருந்த விளையாட்டு மைதானத்திற்கு கூச்சமில்லாமல் தன் பெயரை வைத்துக்கொண்டவர் மோடி. ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் விளையாட்டு விருது இருப்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அநாகரிக அரசியல் பாஜகவுக்குப் புதிதல்ல.
இந்தியாவில் ஒவ்வொரு மனிதரிடமும் தொலைபேசி/அலைபேசி இருக்கும்வரை,கணிணி இருக்கும் வரை,உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள்,ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இட ஒதுக்கீடு இருக்கும்வரை ,நவீன இந்தியா இருக்கும்வரை ராஜீவின் புகழ் நிலைத்திருக்கும். திரு.மோடியின் அற்ப அரசியலால் அதை ஒன்றும் செய்ய முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஆனால் அது உண்மை இல்லை தான் ஒரு எம்.பி என்பதை கூட மறந்து விட்டு பிரதமர் மீது உள்ள வன்மத்தால் உண்மைக்கு புறம்பான செய்தியை மக்கள் மத்தியில் ஜோதி மணி மேடம் பதிவு செய்து உள்ளதாக நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து உள்ளனர்.
குஜராத் கிரிக்கெட் மைதானத்திற்கு பெயர் வைத்தது மத்திய அரசோ,மோடியோ அல்ல.அதை செய்தது குஜராத் கிரிக்கெட் அசோசியேசன்.அதே போல் சர்தார் வல்லபாய் படேல் பெயரை விளையாட்டு வளாகத்திற்கு வைத்துள்ளனர். மோடி மைதானமே அந்த படேல் விளையாட்டு வளாகத்திற்குள் வரும் ஒரு மைதானம் மட்டுமே. அதுவும் அது தனியார்அமைப்பு. அரசு அமைப்பு இல்லை. ராஜீவ் காந்தி விருது அரசு விருது தனியார் விருது அல்ல.