அடுத்த இரண்டு மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது, அனைத்து கட்சிகளும் தேர்தல் வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில் கரூர் பாராளுமன்ற தொகுதியின் தற்போது எம்.பி.யாக இருக்கும் ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என அம்மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது..
மேலும் கரூரில் மாவட்ட காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கரூர் மாவட்ட தலைவர் சேகர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்ரமணி தலைமை வகித்தனர் மாவட்டத் தலைவர் சின்னசாமி கூட்டத்தில் பங்கேற்கவில்லை ஆனால் கரூர் மாவட்டத்தில் உள்ள ஏழு செயலாளர்களும் பங்கேற்றனர் எம்.பி. ஜோதிமணி சரிவர நடந்து கொள்ளாததாலும், மரியாதை கொடுக்காததாலும் கட்சியில் இருந்து பலர் விலகி விட்டனர். தான் என்ற அகம்பாவத்தில் கட்சியை அழித்துக் கொண்டு இருக்கிறார். ராகுல் காந்தியின் பாதயாத்திரையின் போது பலரிடம் பணம் வசூல் செய்துவிட்டு கட்சியினருக்கு தங்குவதற்குக் கூட இடம் ஏற்பாடு செய்யவில்லை.
கரூர் எம்.பி. எஸ்.ஜோதிமணி தொகுதியில் சரிவர பணியாற்றாமலும், பொதுமக்கள் மற்றும் சொந்த கட்சியினரிடம் சரியான அணுகுமுறை இல்லாத காரணத்தாலும், கூட்டணி கட்சியினரிடமும் வெறுப்புணர்வை ஏற்படுத்திய காரணத்தால் தொகுதி முழுவதும் அனைவரும் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.எனவே, அவருக்கு கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இம்முறை வாய்ப்பு வழங்க வேண்டாம் என அகில இந்திய, தமிழக தலைமையை கேட்டுக் கொள்வது. எம்.பி. ஜோதிமணி தமிழக காங்கிரஸ் தலைவர், கட்சி நிர்வாகிகளிடம் மோதல் போக்கை கடைபிடித்து சர்வாதிகாரமாக நடந்து கொள்ளும் போக்கை வன்மையாக கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜோதிமணிக்குசீட் கொடுக்க கூடாது என ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்கள்
ஒரு பக்கம் கரூர் மக்களவை தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கக் கூடாது என திமுகவினர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கரூர் தொகுதியை காங்கிரஸுக்கு கொடுத்தால் எதிர்த்து நிற்பது கழுதையாக இருந்தாலும் சுலபமான வெற்றியை பெறும் என திமுகவினர் தலைமையிடத்தில் குமுறி வருகிறார்கள்.
கரூர் தொகுதியை வழக்கம் போல திமுகவிடம் காங்கிரஸ் கேட்டு வருகிறது. திமுக ஒதுக்க நினைத்த 4 தொகுதிகளில் கரூர் இல்லைதான்; அதேநேரத்தில் காலம் காலமாக கரூர் லோக்சபா தொகுதியில் கூட்டணி கட்சிக்கே வேலைபார்ப்பதா? இதெல்லாம் சரிவராது.. அடுத்த தலைமுறை நாங்க வந்துட்டோம்.. எங்களை நம்பி திமுக வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும்.. நாங்க ஜெயிக்க வைக்கிறோம் என்கின்றனர் திமுக வினர்
இந்த கொந்தளிப்பைத்தான் தலைமைக்கு தெரிவிக்கும் வகையில், “கரூர் தொகுதியை காங்கிரஸ்-க்கு கொடுத்தால் எதிர்த்து நிற்பது கழுதையாக இருந்தாலும் சுலபமான வெற்றியை பெறும் …” திமுக ஆதரவாளர்களே சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.ஆக மொத்தம் கரூர் எம்.பி அக்கா ஜோதிமணிக்கு மத்தளம் போல் மாட்டி கொண்டு ஒரு புறம் திமுக ஒருபுறம் உட்கட்சி எதிர்ப்பு என அடி வாங்கிக்கொண்டே உள்ளார்.
மேலும் மக்களிடம் கெட்ட பெயர் தான் ஜோதிமணிக்கு ஓ நீங்கதான் இந்த ஏரியா எம்.பியா… நாலரை வருஷமா ஏன் வரலை…? ஓட்டு கேட்க மட்டும் தான் வருவீங்களா. எங்க ஊருக்கு நன்றி சொல்லக்கூட வரல என கரூர் எம்.பி. ஜோதிமணியை வழிமறித்து கேள்விகளால் துளைத்து எடுத்து வருகிறார்கள் அப்பகுதி மக்கள்.