தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை திமுக எம்.பி தயாநிதி மாறன் சகோதரர் கலாநிதி மாறனின் கார்ப்ரேட் நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. படத்தின் கதாநாயகி மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
இந்த மும்பை கதாநாயகி குறித்து தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது. இவர்தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் பூஜா ஹெக்டே தமிழில் ஜொலிக்கவில்லை. பின் பாலிவுட்டை நோக்கி சென்றார் பூஜா ஹெக்டே. பின் தெலுங்கில் சில படங்கள் தூக்கிவிட உடனே தமிழில் விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் பூஜா ஹெக்டே படப்பிடிப்புக்கு தன்னுடன் 12 பேரை அழைத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இதனால் கலாநிதி மாறன் கார்ப்ரேட் நிறுவனம் கோவத்தில் உள்ளது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்கே செல்வமணி, தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய ஆர்கே செல்வமணி, பெரிய நடிகர்கள் படம் என்றால் படத்தின் மொத்த பட்ஜெட்டில் நடிகர், நடிகைகளுக்கு 55 சதவீதம் சம்பளமாக கொடுக்கப்படுவதாகவும், 16 மணி நேரம் வேலைபார்க்கும் திரைப்பட தொழிலளர்களுக்கு 1 சதவீதம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுவதாகவும் கூறினார்.
குறிப்பாக முகமூடி படத்தில் நாயகியாக நடித்தபோது 2 பேருடன் படப்பிடிப்புக்கு வந்து சென்ற நடிகை பூஜாஹெக்டே, தற்போது 12 பேருடன் படப்பிடிப்புக்கு வந்து தயாரிப்பாளர்களுக்கு கூடுதலாக செலவை இழுத்து விடுவதாக ஆதங்கப்பட்டார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடனான, தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தர தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை என வேதனை தெரிவித்தார்.
நடிகர் சிம்புவிற்கு உதவி செய்யத்தான் முயற்சித்தோம் ஆனால் தற்போது எங்களுக்கே கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது என்று கூறிய ஆர்.கே செல்வமணி தயாரிப்பாளர்கள் தங்களது முதலாளிகள் எனவும் அவர்களின் ஈகோ விற்கு நாங்கள் இடம் கொடுத்து தான் ஆக வேண்டும் என்றும் இந்த பிரச்சனையை நட்பு ரீதியில் சுமுகமாக கடக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்
Get real time update about this post categories directly on your device, subscribe now.















