நடிகை ரேகா இவர் 1986 ம் ஆண்டு வெளியான சத்யராஜ் நடிப்பில் வெளியான கடலோரக் கவிதைகள் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார் . அதே ஆண்டு தமிழ் திரையுலகின் ஆசான் இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடித்த புன்னகை மன்னன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் முக்கியமான காட்சி தற்கொலை செய்துகொள்ளும் காட்சி. தற்கொலை செய்து கொள்ளும் முன் நடிகர் கமல்ஹாசன் ரேகாவிற்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் அந்த படத்தில் நடித்த நடிகை ரேகா ஒரு தனியார் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் புன்னகை மன்னன் திரைப்படத்தில் இயக்குநர் பாலசந்தரும் நடிகர் கமல்ஹாசனும் தன்னிடம் முத்தக்காட்சிக் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை
என்றும் தன்னுடைய சம்மதம் இல்லாமலே அந்த முத்தக்காட்சி படப்பிடிக்கப்பட்டதாகவும் கூறினார். அந்த காட்சி குறித்து தனது அம்மாவிடம் தன்னை ஏமாற்றி முத்தம் கொடுத்துவிட்டதாக கூறியதாகவும் நடிகை ரேகா பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அப்போதே ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்ததாகவும், அதனால் நடிகர் கமலும், இயக்குநர் பாலச்சந்தரும் கோபத்தில் இருந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
உபதேசம் செய்யும் கமல் ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்திருப்பது தவறு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது
Get real time update about this post categories directly on your device, subscribe now.















