வானதி சீனிவாசனை பற்றி பேசுவதற்கு கமலுக்கு என்ன தகுதி உள்ளது!.. கொரோனா இரண்டாம் அலையில் காணாமல் போன கமல்!

கோவை தெற்குத் தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு எதிராக களம் கண்ட கமல்ஹாசன் இந்த பெருந்தொற்று சமயத்தில் தொகுதி பக்கமே காணவில்லை.போன தேர்தலில் மற்ற இடங்களை விட அதிக ஓட்டு மக்கள் மய்யத்திற்கு கிடைத்த இடம் கோவை தெற்குத் தொகுதி என்ற ஒரு காரணத்தினால் நடிகர் கமல் இங்கே வேட்பாளராக நின்றாரே தவிர தொகுதி மக்களுடனே இருந்து கூப்பிட்ட குரலுக்கு சேவகம் செய்ய எண்ணி வேட்பாளராக நிற்கவில்லை .தேர்தல் முடிவு வந்த 5 மணி நேரத்தில் கமல் கோவையிலிருந்து ஃபிளைட் பிடித்து அடுத்த பட ஷீட்டிங்கிற்கு சென்று விட்டார்.

தன் வெற்றிக்காக கொட்டும் மழையிலும், கடும் வெயிலிலும் உழைத்த தன் கட்சி நிர்வாகிகளை, பொறுப்பாளர்களை சந்திக்கவில்லை, ஒரு நன்றி கூறவில்லை. இவ்ளோ உழைச்சிருக்கீங்க மிக்க நன்றி” என ஒரு வார்த்தை கூறி தொண்டர்களை தோல்வியில் துவண்டுவிடாமல் இருக்க முயற்சி செய்யவில்லை.

வெறும் கமல் என்ற நடிகர் மேல் உள்ள நம்பிக்கையில் இத்தனை ஆயிரம் வாக்குகள் அளித்த கோவை மக்களுக்கு கமல் உறுதுணையாக நிற்கவில்லை, நன்றி சொல்லவில்லை, இந்த உயிர் போகும் இக்கட்டான நேரத்தில் என்ன தேவை, என்ன வேண்டும், தன் புகழைப் பயன்படுத்தி அந்த மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவில்லை, வெறும் பிக்பாஸில் மட்டும் தன்னை நேர்மையாளனாகக் காட்டி திரைக்கவர்ச்சியை வைத்து வென்றுவிட முடியும் என நினைத்த கமல் வென்றிருந்தால் கோவை தெற்கு தொகுதி மக்களின் நிலை என்ன நடந்திருக்குமோ.

வெற்றி வாய்ப்பு வந்தால் மட்டுமே இந்த பிக்பாஸ் இங்கே வருவார் .அதுவும் எப்படி ??? அவ்வப்போது இல்லையெனில் உலகம் சுற்ற போய் விடுவார் இந்த பிறவி நடிகர் கமல்ஹாசன். கொரோனா இரண்டாம் அலையில் விக்ரம் 2 படவேளைகளில் இறங்கிவிட்டார். இந்த கைதேர்ந்த நடிகர் கமல்.

வானதி கடந்த 2016 ஆண்டு தேர்தலில் தோற்றாலும் 5 வடங்களாக கோவை மக்களுக்கு சேவை ஆற்றினார். அதன் காரணமாகத்தான் 2021 கோவை தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். கோவையிலேயே பிறந்த வளர்ந்தவர் வானதி சீனிவாசன் வென்றாலும் தோற்றாலும் தன் தொகுதியை அவர் அம்போவென விட்டு விடமாட்டார் .

காலமறிந்து உதவி செய்தல் என்பது தான் பெரிய உதவி .இந்தக் கொரோனா பெருந்தொற்றின் 2 ஆம் அலை பரவல் காரணமாக மக்கள் உயிர் பயம் காரணமாக செய்வதறியாது வயதானவர்களுக்கு மருத்துவ வசதிகளை தர இயலாது வசதியற்றவர்களும் ,பிற மக்களும் திணறி நிற்கையில் இதோ நானிருக்கிறேன் உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட ! என களம் இறங்கினார் வானதி அவர்கள்கோவை தெற்கு தொகுதி முழுவதும் பம்பரமாய் சுற்றினார். மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்.

கடந்த கொரானா காலகட்டத்தில் தமிழகத்தில் முதன் முறையாக மோடி கிட்சன் திறந்து பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியை தீர்த்தவர். இரணடாம் கட்ட அலையில் தொற்று உச்சத்தில் இருந்த போது தனது கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியை விட்டு எங்கும் செல்லாமல் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் உள்ள குறைபாடுகளையும் ஆக்ஸிஜன் தேவையையும் மத்திய அரசுக்கு எடுத்து கூறி நிவர்த்தி செய்தார் வானதி சீனிவாசன். மேலும் தொகுதி மக்களுக்கு உதவி பொருட்கள் நிவாரண பொருட்கள் என மக்கள் சேவையினை தொடந்தார். நீராவி உபகரண மையம் மற்றும் நடமாடும் நீராவி வாகன சேவை அறிமுகப்படுத்தினார்.

கொடிய அரக்கன் கொரோனாவை ஒழிக்க தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு தொய்வின்றி செய்தார்.
கொரோனா தடுப்பூசி இலவச மருத்துவ உதவி மையத்தை அமைத்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இலவச வாகன வசதி ஏற்பாடு செய்தார் ,மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் , மருந்துகள் உங்கள் வீடு தேடி கொண்டு சேர்த்தார் ,கொரோனா பாதித்த குழந்தைகள் , முதியவர்களை கவனித்து கொள்ள உதவிகள் செய்து தந்தார். 234 சட்டமன்ற உறுப்பினர்களில் தனி ஒருவரை திகழ்ந்தவர் வானதி சீனிவாசன் அவர்கள்.

வெற்றி பெற்றால் மட்டுமே களத்திற்கு வந்து களமாடுவேன் என்றிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியிலே ,இந்த பெருந்தொற்று சமயத்தில் மக்களை முடிந்த வரை குழப்பி திணறடித்து அதிலும் தனக்கான அரசியல் ஆதாயங்களை உருவாக்கி விட்டு, கொடைக்கானலுக்கு குடும்பத்தோடு உல்லாச சுற்றுலாவிற்கு சென்ற கள்ளத்தனமான அரசியல்வாதிகளுக்கு மத்தியிலே , அரிதாரம் பூசி சினிமா வசனங்கள் பேசிய நாடக நடிக அரசியல்வாதிகளுக்கு மத்தியிலே கொடிய பெருந்தொற்று என்ன அந்த எமனே வந்தாலும் சரி அஞ்சாது மக்கள் பணி ஆற்றுவேன் என்று களமிறங்கி சேவை செய்தவர் தான் வானதி அவர்கள்.

வானதி சீனிவாசனை பற்றி பேசும் கமல் அவர்களே நடிப்பிற்கு முழுக்கு போட்டு மக்கள் சேவை ஆற்ற தங்களுக்கு தைரியம் உள்ளதா. நடித்து விட்டு பொழுது போக்கும் உங்களுக்கு மக்களை பற்றி என்ன தெரியும் மக்கள் சேவை ஆற்றும் சேவகர்களை பற்றி கமலுக்கு என்ன தகுதி உள்ளது. விக்ரம் பட சூட்டிங் இடைவெளியில் கோவை தொகுதிக்கு வந்து படம் ஓட்டும் கமல் அவர்களே மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நாடகம் போடுவதற்கு கோவைக்கு வந்துவிட்டார். இரண்டாம் அலை ஓய்ந்த பிறகு கோவை தொகுதிக்கு வந்துள்ளார் பரம நடிகர் கமல் அவர்கள்.

Exit mobile version