கங்கனா ரணாவத் தான் தற்போது இந்தியாவின் ஹாட் டாபிக். மஹாராஷ்டிர அரசியலில் புயலை கிளப்பியவர் தான் கங்கனா ராணாவத். ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை அல்ல கொலை அது தொடர்பாக விரிவான விசாரணை வேண்டும் என பாலிவுட்டில் மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டார். இது பாலிவுட்டின் அஸ்திவாரத்தை ஆட்டி படைத்துள்ளது. மகாராஷ்டிரா அரசு இதை மூடி மறைப்பதை சுட்டிக்காட்டினார். கங்கனா ராவத். இதன் காரணமாக மஹாராஷ்டிரா மாநில அரசுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. கங்கனா ரணாவத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசு சார்பில், அவருக்கு, ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் நடிகர் சங்க தலைவரும் பிரபல தயாரிப்பாளருமான விஷால் எப்போதும் ஏதாவது ஒன்றை செய்து கொண்டிருப்பவர். திருட்டு விசிடி ஒழிக்க கடை கடையாக ஏறி இறங்கி பரபரப்பை ஏற்படுத்தியவர். இளம் நடிகர் பட்டள்ளதுடன் நடிகர் சங்கத்தை கைப்பற்றி பரபரப்பை கிளப்பிவர் தான் விஷால். அவ்வப்போது அரசியலில் இறங்குவது போல் ஒரு பிம்பம் காட்டுவார்கள் இந்த நடிகர் பட்டாளம்! விஷால் அரசியல் வருவாரோ இல்லையோ கண்டிப்பாக கார்த்திக் வந்துவிடுவார். அரசியல் பேசுவதை வழக்கமாக வைத்திருப்பவர் தான் கார்த்தி.
ஆனால் கங்கனா ராணவத்திற்கு ஆதரவு குரல் கொடுத்தவர் விஷால் தான் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உங்களின் துணிச்சலை பாராட்டுகிறேன். மனதில் பட்ட கருத்துக் களை துணிச்சலாக சொல்கிறீர்கள். உங்களுடைய தனிப்பட்ட பிரச்னைக்காக இல்லாமல், பொதுப் பிரச்னைக்காக, தாங்கள் போராடுவது, 1920ல், பகத்சிங் போராடியது போல் உள்ளது. நல்ல விஷயத்திற்காக, அரசை எதிர்த்து சாமானிய மக்களும் போராடலாம் என்பதை, உங்களின் போராட்ட குணம் எடுத்து காட்டுகிறது. உங்கள் நடவடிக்கைக்கு என் பாராட்டுக்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விஷால், தமிழக பா.ஜ.க தலைவர் முருகனை வரும், 14,15 ம் தேதிகளில், சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். விஷால் சந்திப்பு, வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், கட்சியில் இணைவதற்கான சந்திப்பாக இருக்கலாம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.
கங்கனா ரணாவத்திற்கு, விஷால் ஆதரவு அளித்திருப்பதை தொடர்ந்து, அவர், பா.ஜ.கவில் சேர வாய்ப்பு உள்ளது. அதனால் தான், முருகனை சந்திக்க விஷால் அனுமதி கேட்டுள்ளதாக, அவரது ஆதரவு வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பு அடைந்துள்ளது. அண்ணாமலை ஐ .பி.எஸ். விஷால் என பா.ஜ.கவின் அதிரடி அரசியல் தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்