இந்து வெறுப்பின் உச்சம் விநாயகர் சிலையை வாங்காமல் தள்ளி வைத்து அவமதித்த கனிமொழி.

தி.மு.க தலைவர்கள் அதிலும் குறிப்பாக கருணாநிதி குடும்பத்தார்கள் என்னதான் தேர்தலுக்காக “வேல்” எடுத்து நாடகம் போட்டாலும், நெற்றியில் பட்டையடித்து வலம் வந்தாலும் அவ்வபோது அவர்களின் ஆழ்மனதில் பதிந்துள்ள இந்துமத வெறுப்பு மட்டும் அகலாமல் அப்படியை நிலைகொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஒரு மாத காலமாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது தங்கை கனிமொழி ஆகியோர் இந்து மத அடையாளங்களை தங்கள் பிரச்சாரத்திற்காக உபயோகபடுத்தி வந்தனர். காவி உடை மட்டும் உடுத்தவில்லை என்னும் அளவிற்கு இந்துக்களின் வாக்கு வங்கிக்காக ஓட்டு வேட்டையில் இறங்கினர். அதை தேர்தலுக்காக மட்டுமே மற்றபடி நாங்கள் இந்துக்களை எதிரியே என நிரூபிக்கும் படி கனிமொழி நேற்று நடந்துகொண்டுள்ளார்.

தற்பொழுது தி.மு.க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கனிமொழி நேற்று சிவகங்கை மாவட்டம்  மானாமதுரையில் உள்ள  குடிசைத் தொழில்கள் அலுவலகத்தை  பார்வையிட்டு அவர்களின் பரிசுகளை ஏற்றுக்கொண்டார்.

அப்பொழுது, திமுக மகளிர் பிரிவின் நகர அமைப்பாளர் அவருக்கு விநாயகர் சிலை ஒன்றை வழங்கினார், கனிமொழி வாங்க மறுத்து பிள்ளையாரை தள்ளி வைத்தார். ஆனால் அங்கு இருந்த ஊழியர் ஒருவர் அளித்த காந்தியடிகள் சிலையை வாங்கியபடி புகைப்படத்திற்கு வடிவம்  குடுத்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. என்னதான் தேர்தலுக்காக தி.மு.க தலைவர்களை இந்து மத மீது பாசம் இருப்பதாக நாடகம் போட்டாலும் உள்ளூர தி.மு.க’வினர் இந்துக்களின் எதிரியே என இதன் மூலம் தெளிவாகிறது.

Exit mobile version