கனிமொழி முன் தொண்டர்களை தகாத வார்த்தையால் பெண்கள் முன் திட்டும் மாவட்ட செயலாளர்.

தி.மு.க., மகளிர் அணி செயலாளர் கனிமொழி, எம்.பி., திருப்பூரில், 12ம் தேதி திமுக சார்பில் தேர்தல் பிரசாரம் செய்தார். போக்குவரத்து நெருக்கடி மிகுந்த குமரன் ரோட்டில், வாகனத்தில் இருந்து இறங்கிய கனிமொழி, நடந்து சென்று, மக்களிடம் ஸ்டாலின் படத்தை வினியோகித்து பிரசாரம் செய்தார்.

ஒரு துணிக்கடை முன் கனிமொழி சென்றபோது, அவரை கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர்.

இதைப்பார்த்து ‘டென்ஷனான’ திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., செயலாளர் செல்வராஜ், கையை நீட்டி தொண்டர்களை ‘தகாத’ வார்த்தைகளால் ஆக்ரோஷமாக, சத்தம் போட்டார்.

கனிமொழி அருகில் இருந்ததையும் பொருட்படுத்தாமல், திட்டியது அருகிலிருந்த பெண்களை முகம் சுளிக்க வைத்தது. தனது முன்னிலையிலேயே, மாவட்ட செயலாளர் தகாத வார்த்தையால் தொண்டரை திட்டியதை, கனிமொழி கண்டுகொள்ளவும் இல்லை; அவரை கண்டிக்கவும் இல்லை.

தற்போது இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.

திமுகவினருக்கு இதல்லாம் சாதாரமப்ப எண்கின்றனார் மக்கள்.


FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version