10 பேர் நிற்க கூடிய பிரம்மாண்ட பயணியர் நிழற்குடை அமைக்க செலவு 1.54 கோடி! நெட்டிசன்கள் வாழ்த்து மழையில் கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி தொகுதி திமுக பாராளுமன்ற உறுப்பினர் தமிழக முதல்வர் தங்கையும் தி.மு.க மகளிர் அணி செயலாளருமான கனிமொழி அவர்கள். தூத்துக்குடி சீர்மிகு திட்டத்தின் கீழ் செயின் மேரிஸ் பள்ளி பள்ளி அருகே ஒரு பயணியர் நிழற்குடை அமைத்து தந்துள்ளார்.
பல அரசு பள்ளிகளில் அருகில் பேருந்து நிலையம் இல்லை . அதை பற்றி கவலை கொள்ளாமல் செயின்ட்மேரிஸ் பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை உடனடியாக நிவர்த்தி செய்துள்ளார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
மேலும் அந்த பயணியர் நிழற்குடையில் சுமார் பத்து பயணிகள் மழை, வெயில் படாமல் நிற்கும் அளவிற்கு மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட பேருந்து நிழற்குடை திறப்பதற்கு அந்த விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனும் கலந்துகொண்டார்.
பிரம்மாண்ட நிழற்குடை பற்றி ஒரு பார்வை:
அங்கு திறக்கப்பட்ட கல்வெட்டில் அந்த பணியின் மதிப்பீடு 154.00 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 1.5 கோடி மதிப்பீடு.
பயணிகள் நிழற்குடையில் ஒரு கலர் ஷட் வேய்த கூரை, இரண்டு அடி உயரத்தில் நிற்க மேடை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிரில் கைப்பிடி என எல்லாம் அமைக்கப்பட்டுள்ளது.
ந்து முதல் பத்து பயணிகள் மழை, வெயில் படாமல் நிற்கும் அளவிற்கு இந்த பிரம்மாண்ட பயணிகள் பேருந்து நிழற்குடை அமைத்துள்ளார்கள்.
இதற்கு வெறும் 1.5 கோடி சிக்கன செலவில் கட்டி முடித்துலாளர்கள் திமுக அரசு. இதை பாராட்டி நெட்டிசன்கள் வாழ்த்துமழை பொழிந்து வருகிறார்கள்.
1.5 கோடி சென்னையில் 1 கிரௌண்ட் இடம் இருந்தால் 3 மாடி கட்டிவிடலாம் எல்லா வசதிகளுடன். அண்ணா நகரில் 2 BHK ஃபிளாட் வாங்கிடலாம் கொஞ்சம் அவுட்டோரில் வாங்கினால் முழுசா ஒரு கோடி தாண்டாது.
ஆனால் 10 பேர் நிற்கும் மிக பெரிய பிரம்மாண்ட நிழற்குடை பைபர் ஷீட்டுக்கும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ராடுக்கும் செஞ்ச செலவு வெறும் 1 கோடியே 54 லட்சமாம்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















