இதோ, அதோ…’ என நீண்டகாலமாக இழுத்துக் கொண்டிருந்த அமைச்சரவை மாற்றமும், உதயநிதிக்கான துணை முதல்வர் பட்டாபிஷேகமும் ஒருவழியாக நடந்து முடிந்திருக்கிறது. சமீபத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, “மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது…” எனக் கூறியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அவர் சொன்னதுபோலவே மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதேநேரத்தில், ஏமாற்றமும் பலரைப் பதம் பார்த்திருக்கிறது இதுஉட்கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சீனியர்ஸ் அனைவரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. குடும்பத்திற்குள்ளேயும் புகைச்சல் ஆரம்பித்துள்ளது.அதுமட்டுமில்லாமல் நினைத்தை நடத்திக்காட்டிய துர்கா ஸ்டாலின் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளாராம்.
புதிய அமைச்சரவையிலிருந்து மூன்று பேர் விடுவிக்கப்பட்டு, நான்கு பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றிருக்கிறார்கள். அமைச்சர் கனவோடு இருந்த சிலரின் ஆசைகள் நிராசையாகியிருக்கின்றன. பதவிப் பறிப்பிலிருந்து தப்பிய சிலர், நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். இது ஒருமனக்கசப்பான உணர்வை தி.மு.க-வுக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் கொண்டுவந்திருக்கிறது.
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனக்கு மீண்டும் நிதித்துறை வழங்கப்படுமென எதிர்பார்த்தார். ஆனால் லிஸ்டில் ஏற்றவேயில்லைஇப்போதிருக்கும் பதவியே போதும்’ எனத் தலைமை முடிவெடுக்கவே, ஏமாந்து போய்விட்டார் பி.டி.ஆர். அந்தக் கடுப்பில்தான், முப்பெரும் விழா, பவள விழாக்களைத் தவிர்த்ததோடு, அமைச்சரவைப் பதவியேற்பு விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. மேலிடக் குடும்பப் பிரமுகர் கூப்பிட்டுக் பேசிய பிறகே, தனியாகச் சென்று உதயநிதியையும், புதிதாக அமைச்சரவையில் இடம்பிடித்தவர்களையும் சந்தித்திருக்கிறார் பி.டி.ஆர்.
‘கட்சியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் உதயநிதியை அடுத்தடுத்த இடங்களுக்கு எடுத்துச் செல்வதுபோலத் தன்னையும் அடுத்த கட்டதுக்குக் கொண்டு செல்வார்கள் என நினைத்திருந்தார் கனிமொழி. ஆனால், அப்படி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருக்கிறது. அதை வெளிக்காட்டும்விதமாகவே பதவியேற்பு விழாவுக்குத் தாமதமாக வந்தார்’ என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.” ‘மு.க.அழகிரிக்கு வழங்கப்பட்டதுபோலத் தென்மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பு கனிமொழிக்கு வழங்கப்பட வேண்டும்’ என அவருடைய ஆதரவாளர்கள் தலைமைக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
உதயநிதியை பாரளுமன்ற தேர்தலுக்கு முன்னரே துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என பேசப்பட்டது. இதற்கு சபரீசன் தான் முட்டுக்கட்டை போட்டுள்ளார். உதயநிதியை தற்போது துணைமுதல்வர் பதவி கொடுத்தால் தேர்தலில் திமுக வீழ்ச்சியடையும் என ரிப்போர்ட் கொடுத்துள்ளார்.இதன் பின் தான் உதயநிதி கப்சிப் ஆனார். திமுகவின் அடுத்த பொறுப்புக்கு கனிமொழிக்கு ஆதரவாக காய்களை நகர்த்தியுள்ளார், இது தெரிந்த ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. அதன் பின் தான் உடனே பட்டாபிஷேகத்திற்கு முடிவெடுத்துள்ளார்கள்
இதன் காரணமாகவே உதயநிதி அவசர அவசரமாக என்னை சந்திப்பதற்காக, சென்னைக்கு பயணம் செய்வதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்.பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து, உங்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்கிறேன். என அடக்கி வாசிக்க தொடங்கியுள்ளார்.