சென்னையில் நடைபெற்ற விமானப் படை சாகச நிகழ்ச்சியைக் காண வந்த மக்கள் பலரும் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டதற்கு திமுக எம்.பி கனிமொழியும் கூட்டணி கட்சியினரும் விமர்சித்துள்ளனர்.இதற்கு காரணம் உதயநிதி மேல் இருக்கும் கடுப்பு தான் என கனிமொழி ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
திமுகவின் தலைமைக்கு வர ஸ்டாலினுக்கு எடுத்துக்கொண்ட ஆண்டுகள் போல உதயநிதி ஸ்டாலினுக்கு நீண்ட ஆண்டுகள் த்விபடவில்லை . ஏனென்றால் கட்சியில் ஸ்டாலினுக்குப் பிறகு அதிகாரமிக்க முகமாக உதயநிதி முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் கட்சியின் துணைபொதுச்செயலாளராக இருக்கும் கனிமொழி கடும் அதிருப்தி அதிருப்தியில் உள்ளார்.
அதுமட்டுமில்லமல் தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்பட்ட நிலையில் இதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இட்ட ஒரு பதிவு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியது,கனிமொழி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தைப் பதிவிட்டார். கனிமொழி மேடையில் பேசும்போது பக்கவாட்டில் கலைஞரின் இளவயது படம் இருக்கும் புகைப்படம் அது.
அந்த புகைப்படத்தை பதிவிட்டு, “அப்பா…நீங்க எப்பவும் என் கூட இருக்கீங்க. நான் தனியாக இல்லை…’ என்று குறிப்பிட்டுள்ளார்.இதுதான் திமுக வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கட்சியும் ஆட்சியும் முழுதாக உதயநிதி கைகளுக்கு போய்விட்டது, கனிமொழி தனித்துவிடப்படுகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லிவந்த நிலையில்தான், ‘நான் தனியாக இல்லை… என்னுடன் அப்பா இருக்கிறார்’ என்ற ரீதியில் கனிமொழியின் இந்த இன்ஸ்டா பதிவு அமைந்தது
இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (அக். 6) விமானப் படையின் 92- ஆவது ஆண்டு விழா சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைப் பார்வையிட பல லட்சம் மக்கள் கூடியதைத் தொடர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 240-க்கும் மேற்பட்டோா் மயங்கி விழுந்து, அவா்களில் 93 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
இதனைத் தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில், “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சின்னவரின் ஆதரவாளர்கள் கனிமொழியை சமூக வலைத்தளங்களில் விமர்சிக்க தொடங்கியுள்ளது அறிவாலயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.