அனுமதியில்லாமல் திடீர் சர்ச்- குமரியில் பரபரப்பு.!

கன்னியாகுமரி மாவட்டம்  ஆளூர் பேரூராட்சி சிவபுரத்தில் புதிதாக அனுமதியில்லாம் கட்டப்படும் திடீர்ஜெபக்கூடத்தை தடைசெய்யகோரி இரணியல் காவல்நிலையத்தில் இந்து இயக்கத்தினர் புகார் . 

கள்ளியங்காடு சிவன் கோவில் அருகில் ஐந்து பாதிரியார்கள் முன்னிலையில் சர்ச் கட்டும் பணி நடைபெறுகிறது ஆளூர் பஞ்சாயத்து உட்பட்ட பகுதியில் ஒரு வாரமாக பணி நடைபெறுகிறது அந்தப் பகுதியை சார்ந்த இந்து நண்பர்கள் அந்த பில்டிங் காண்ட்ராக்டரிடம் கேட்டபோது நாங்கள் அப்படித்தான் சர்ச் கட்டுவோம் நீங்கள் ஒன்றும் எங்களை செய்ய முடியாது மிரட்டல் விடுத்துள்ளார் .

இதை அறிந்த குமரிமாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வழக்கறிஞர் சிவகுமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் இராணியல் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தனர். இதனால் குமரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கட்டுரை: எழுத்தாளர் சுந்தர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version