இந்துக்கள் தினமும் பக்தியுடன் படிக்கும் கந்த சஷ்டி கவசத்தை கேவலமாகவும், ஆபாசமாகவும் விமர்சித்து கறுப்பர் கூட்டம் என்ற இந்து வெறுப்பர் கூட்டம், வீடியோ பதிவு வெளியிட்டு இருந்தது. இதுபோல ஏராளமான வீடியோக்கள் இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் கேவலப்படுத்தி வெளியிட்டு இருந்தனர்.
இது இந்துக்கள் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்து பெண்கள் கொதிப்படைந்தனர். இதனால் அவர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள். பாஜக உள்பட இந்து அமைப்புகளும் இந்த போராட்டங்களை முன்னெடுத்து சென்றன. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின், கறுப்பர் கூட்டத்திற்கு ஒரு சிறு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. இதன் மூலம் அவர், கறுப்பர் கூட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறார் என்பது தெள்ளத்தெரிவாக வெளியானது. இந்நிலையில் பாஜக இளைஞர் அணி நிர்வாகிகள் கறுப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்கள். பின்
அதன் தொடர்ச்சியாக சட்ட ரீதியாக காவல் ஆணையரிடம் கறுப்பர் கூட்டம் மீது புகார் அளித்துள்ளனர். இந்த தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளும் இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் கொடுத்துள்ளனர்.இந்த விவகாரம் சூடு பிடிக்க கந்த சஷ்டி கவசத்தை கேவலப்படுத்திய கறுப்பர் கூட்டத்தின் முக்கிய புள்ளி, இப்போது சிறையில் உள்ளார். இது தொடர்பாக, தமிழக காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய இந்த கூட்டம் குறித்து, ஓர் அறிக்கை வேண்டும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உளவுத் துறையிடம் கேட்டிருந்தாராம். தற்போது ஹைலைட்
களத்தில் இறங்கிய மத்திய அரசின் உளவுத் துறை கறுப்பர் கூட்டம் பற்றிய மொத ஜாதகத்தையும் எடுத்து ஓர் ரகசிய அறிக்கையை அமைச்சர் அமித் ஷாவிடம் அளித்துள்ளது.என்பது தெரியவந்துள்ளது.கறுப்பர் கூட்டத்திற்கு பண ரீதியாக யார் உதவி வருகின்றனர்; இந்த அமைப்பின் பின்னால் இருப்பவர்கள் யார்; எந்த அரசியல் கட்சிகள், இந்த கூட்டத்துடன் தொடர்பு வைத்துள்ளனர் என, அனைத்து விபரங்களையும், உளவுத் துறை திரட்டியுள்ளதாம். இதை வைத்து, தமிழக அரசியலில் பிரசாரத்தை மேற்கொள்ள, பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.
தி.மு.க.,வின் கடவுள் எதிர்ப்பு நிலை கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக, அதிகம் பேசாமல், அமைதி காத்தது என, பல விஷயங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல, பா.ஜ., தயாராகி விட்டதாம்.’அடுத்த முறை தமிழகத்தில் பயணம் செய்யும் போது, பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, இந்த கறுப்பர் கூட்டம் தொடர்பாக பேசுவர்.என தகவல் தெரிவிக்கின்றன. கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் கைமாறிய பணம் தொடர்பான விவகாரத்தில், அமலாக்க துறையும் விசாரணையில் இறங்கும் என சொல்லப்படுகிறது. தமிழக அரசியலை மாற்றும் சக்தியாக கந்த சஷ்டி கவசம் அமையம் என்பதில் மாற்று கருத்து கிடையாது.