இந்த முறை ஏன் மாண்புமிகு அமைச்சர்கள் கை அசைக்காமல் இருந்தனர். ஒரு வேளை அமைச்சர் நிலை நினைவிற்கு வந்ததோ?சமூக வலைதளைங்களைளில் வைரலாகும் பொன்முடி,.. கர்மா தந்த வினை,.. என ஆளுநர் வெளிநடப்பு பேசுபொருளாகி உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 9- ஆம் தேதி சட்டப்பேரவையில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் இதனிடையே, ஆளுநர் பேசி கொண்டு இருக்கும் போதே, தி.மு.க.வினர் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுனரை பேச விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, தனதுஆளுநர் உரையை முடித்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டப்பேரவையிருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி .
ஆளுநரர் ரவி வெளியே செல்லும்போது அப்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி ”போய்யா’ என்று சைகை காட்டினார்.இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 11.02.2024 திங்கள்கிழமை தொடங்கியது. இம்முறை, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்தார்.அவையில் சில நிமிடங்கள் பேசிய அவர், “சட்டப்பேரவையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாகும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்.வாழ்க தமிழ்நாடு.. வெல்க பாரதம்.. நன்றி,” என்று ஆளுநர் தெரிவித்தார். இன்று பாதியிலேயே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவையில் முழு உரையை சபாநாயகர் அப்பாவு தான் வாசித்தார்.
கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநரை வெளியே சென்ற போது, சைகை காட்டிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை . ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் பதவியை இழந்துள்ள பொன்முடி, எம்எல்ஏ பதவியை இழந்த காரணத்தால் இன்று கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.
இது தான் கர்மா என பொன்முடியை வைத்து சமுக லைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த வழக்கில் தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன் காரணமாக பொன்முடி தனது பதவிகளை இழந்துள்ளார்.
மேலும் ஆளுநரின் நிலைப்பாட்டில் குறை சொல்ல முடியாது. காரணம் பொய்யான விஷயங்களை இந்த அரசு வெளிப்படையாக கூறியுள்ளது வரவேற்கதக்கது. இது சரிதானே. செந்தில் பாலாஜிக்கு எதற்கு மாதம் தோறும் சம்பளமாக ஒருலட்சத்துக்கும் மேல் தரணும் என்கிற விவரங்கள் இல்லை. இன்னோர் அமைச்சர் மீது தீர்ப்பும் வந்துவிட்டது அவர் எம் எல் ஏ பதவியும் மந்திரி பதவியையும் இழந்த காரணத்தை இந்த அறிக்கையில் திமுக சொல்லாமல் போனதை எப்படி ஏற்பது தவறான உதாரணம் ஆகிடாதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.