கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்றார்! யார் இந்த பசவராஜ் பொம்மை?

இன்று பகல் 11:00 மணிக்கு பசவராஜ் பொம்மை, கர்நாடகாவின் 24வது முதல்வராக பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்ஆர் பொம்மை மகன் தான் இந்த பசவராஜ் பொம்மை கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா ராஜினமா செய்ததை தொடர்ந்து கர்நாடகாவின் புதிய முதல்வராக யார் என்ற புயல் இந்தியா முழுவதும் வீசியது. கர்நாடகாவில் 4 முறை முதல்வராக இருந்த எடியூரப்பா நேற்று முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையை கலைத்தார்.

அனைவரும் கர்நாடகாவின் பிரகலாத் ஜோஷி, சி.டி.ரவி பி.எல்.சந்தோஷ் என எதிர்பார்க்க டெல்லி வட்டாரங்களோ வேறொரு முடிவை எடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அது தான் தற்போது நடந்துள்ளது. கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்தடுத்துதுள்ளது பா.ஜ.க மேலிடம் முடிவு செய்துள்ளது. இது மாஸ்டர் ஸ்ட்ரோக் என கர்நாடக அரசியல்வாதிகள் கூறியுள்ளார்கள். ஏன் என்றால் இவர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர், உள்துறை அமைச்சராக உள்ளார். மேலும் சட்டத்துறை போன்ற முக்கியத் துறைகளை தன்வசம் வைத்திருந்த சீனியர் அமைச்சராகும்.

பசவப்பா பொம்மை லிங்காயத்து இனத்தை சார்ந்தவர்.இதனால் லிங்காயத் ஓட்டுகள் பிரிய வாய்ப்பில்லை . மேலும் லிங்காயத்து மடாதிபதிகள் மற்றும் சமுதாய மக்கள் பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு அளித்துள்ளார்கள்.

2008 ஆம் ஆண்டு தான் தன்னை பா.ஜ.கவில் இணைத்து கொண்டு அரசியல் பணிகளை மேற்கொண்டார், இவரின் கட்சி வேலைகளை பார்த்து டெல்லி அசந்து போனது. அதன் பிறகு இவரது வளர்ச்சி மிக வேகமாக இருந்தது. பசவராஜ்​ பொம்மை இருமுறை மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஜனதா பரிவார் இயக்கத்தில் இருந்து வந்த பசவராஜ் பொம்மை தந்தை எஸ்ஆர் பொம்மை 1988ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பசவராஜ் பொம்மை. அனைத்து கட்சியினர் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் இடமும் சுமூகமாக பழகக் கூடியவர் என்பதால் இவர் முதல் சாய்ஸாக இருக்கிறார். இதனுடைய பெங்களூரில் இன்று இரவு நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் குழுக்கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பெயரை சட்டசபை குழு தலைவராக எடியூரப்பா முன்மொழிந்தார். அதாவது புதிய முதல்வரின் பெயர் எடியூரப்பாவால் அறிவிக்கப்பட்டது.

இதை மூத்த அமைச்சர் கோவிந்த கார்ஜோல் வழிமொழிந்தார். இதையடுத்து கர்நாடக பா.ஜ. க சட்டசபை குழுத் தலைவராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று பகல் 11:00 மணிக்கு பசவராஜ் பொம்மை, கர்நாடகாவின் 24வது முதல்வராக பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பதவியேற்று கொண்டதும், பசவராஜ் பொம்மைக்கு கவர்னர், எடியூரப்பா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்

Exit mobile version