விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி செய்ப்பட்டது. இதனையடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் காங்., ஆட்சி காலத்தில் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தவர். இவரது செல்வாக்கை பயன்படுத்தி அவரது மகன் கார்த்தி வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக 250 சீனர்களுக்கு விசா வழங்கிட ரூ.50 லட்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்க துறை மற்றும் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கார்த்தி தரப்பில் பல்வேறு மனுக்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.டில்லி ஐகோர்ட்டில் தாக்கலான முன்ஜாமின் மனுக்கள் இன்று தள்ளுபடி ஆனது. அத்துடன் ஆடிட்டர் பாஸ்கர் ராமன், விகாஸ் மகாரியாவின் முன் ஜாமின் மனுவையும் தள்ளுபடியானது.