மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
தமிழத்தில் இந்துக்கள் , இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் என அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல வாழ்ந்து வருகின்றனர்.
இதை கொடுக்கும் விதமாக “ கருப்பர் கூட்டம் “ எனும் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் ,கதாகாலட்சேபம் என்ற ஒரு தலைப்பில் தமிழ் கடவுளான முருகரைப் பற்றி தேவையற்ற முறையில் மிகவும் ஆபாசமாக பேசி உள்ளனர்.
நான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்ல, ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையை மதிப்பளிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன் !
“ கருப்பர் கூட்டம் “ போன்ற ஒரு சிலரால் மதக் கலவரங்கள் வரும் சூழல்ஏற்படுகிறது . தமிழக அரசு , காவல்துறை மூலம்உடனடியாகஇதில் ஈடுபட்டு வருபவர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் !
மேலும் அமைதியை விரும்பும் அனைத்துமதங்களைச் சேர்ந்தவர்களும் , குறிப்பாக இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த மத நல்லினத்தைமுன் நிறுத்தும் தோழர்களும் இதை கண்டிக்க வேண்டும் !
இவர்கள் செய்யும் இந்த தேவையற்ற செயல்களால் , எங்களைப் போன்ற நடுநிலையாளர்களே சங்கடமான சுழலில் தள்ளப்பட்டுள்ளோம்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடனடியாகஇவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.யூ.ஜே.சார்ப்பில் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தங்கள் உண்மையுள்ள
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநில தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( TUJ )
9444111494
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















