கருப்பர் கூட்டம் you tube channel மீது புகார் அளித்த பாஜக நிர்வாகி.

இந்த முறை வழக்கமான மெத்தனத்தை காவல்துறை காட்டினால் உயர்நீதிமன்றம் செல்ல உள்ளேன்.

அ.அஸ்வத்தாமன் ,
பாஜக.

((புகாரின் விபரம்))

தேதி: 12.07.2020.

அனுப்புதல்:
அ.அஸ்வத்தாமன்,
வழக்கறிஞர்,
T1, Singapore plaza,
Lingi chetty st,
Parrys.

பொருள்: மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டுதல் , ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினம் ஊக்கமூட்டி , மத அமைதியை குலைத்தல், கொச்சையான வார்த்தைகளை காட்சிப்படுத்தி வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப் படுத்தும் நோக்கத்தில் வெளியிடுதல், வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில் பேசி அதை காட்சிப்படுத்துதல்,அதன்மூலம் குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி அதன்மூலம் அவர்களைத் தூண்டி பொது அமைதியை சீர்குலைக்க முயற்சித்தல், உண்மைக்கு புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்தல், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது அவதூறு பரப்புதல் ,அவதூறாக கொச்சையாக காட்சிப்படுத்துதல் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுதல் ஆகிய குற்றங்களுக்காக “கருப்பர் கூட்டம்” என்கிற சமூக வலைதள chennel களை கையாள்பவர்கள், உரிமையாளர், கொச்சையான வீடியோக்களில் பேசுபவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோருதல்- சார்பு

Link : https://www.facebook.com/karupparkoottam/

https://www.youtube.com/c/KarupparKoottam

“கருப்பர் கூட்டம்” என்கிற you tube channel மற்றும் Facebook page கள் சில சமூக விரோதிகளால் தொடங்கப்பட்டு இந்துக்களின் மனதை , உணர்வுகளை புண்படுத்தி அதன்மூலம் இந்துக்களை தூண்டிவிடும் நோக்கத்தில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

அதில் உள்ள வீடியோக்கள் ,இந்து மதத்தைப்பற்றியும், அவதூறான கருத்துக்களும் ,கொச்சையான காட்சிப்படுத்துதல்களும்,வசனங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது கூட கந்தர்சஷ்டி கவசத்தை கொச்சையாக விமர்சித்து இந்த “கருப்பர் கூட்டம் என்கிற you tube chennel ல் வெளியிடப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது . https://www.facebook.com/100003780336838/posts/2050677688401556/

மேற்கண்ட வீடியோ, வேண்டுமென்றே ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும் ,அதன் மூலம் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் ஒரு மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவ்வாறு புண்படுத்தி அதன்மூலம் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், இந்து வழிபாடுகளை கொச்சைப்படுத்தி அதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தும் நோக்கத்திலும், ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினம் ஊக்கமூட்டும் நோக்கத்திலும் , மத அமைதியை குலைக்கும் வகையிலும், கொச்சையான காட்சிப்படுத்தல் மூலம் வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப் படுத்தும் நோக்கத்தில் வெளியிடும் வகையிலும், வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில் வசனங்களை காட்சிப்படுத்தி குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி அதன்மூலம் அவர்களைத் தூண்டி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் உண்மைக்கு புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட கருப்பர் கூட்டம்” என்கிற சமூக வலைதள chennel களை கையாள்பவர்கள், உரிமையாளர், கொச்சையான வீடியோக்களில் பேசுபவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A), 295 , 295(A), 296 ,298 ,499, 504, 505,188 மற்றும் 67 IT ACT உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

காவல்துறை, இந்த விஷயத்திலாவது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் தேசப்பணியில் ,

அ.அஸ்வத்தாமன்

Exit mobile version