5 பிள்ளைகள் பெற்றால் ஊக்கத்தொகை கேரளா கத்தோலிக்க சர்ச் நிர்வாகம் ! 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை அசாம் மற்றும் உ.பி.அரசு!

கேரளாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் அதிகம்.கேரளவில் ஆட்சி கட்டிலில் யார் என்பதை நிர்ணயிப்பவர்கள் இவர்கள் தான். கேரளாவை பொறுத்தவரை கத்தோலிக்க கிருஸ்துவர்கள் 18 சதவீதமாக இருந்தது ஆனால் தற்போது 5 சதவிதம் குறைந்து 14 சதவீதமாக உள்ளது இந்த நிலையில் 5 குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுக்கும் ஒவ்வொரு கிறிஸ்துவ குடும்பத்திற்கு ஆபர் கொடுத்துள்ளது சர்ச் நிர்வாகம்.

கேரளாவில் உள்ள சிரிய மலபார் கத்தோலிக்க ஆலயத்தின் பாலா மறைமாவட்டம் சார்பில்,ஒவ்வொரு ஆண்டும் ‘குடும்ப ஆண்டு’ கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த வருடம் குடும்ப ஆண்டு குறித்துபாலா மறைமாவட்ட ஆயர் பாதிரியார் ஜோசப் கல்லரங்காட் என்பவர் அனைத்து அடுத்து தேவாலயங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.

அந்த சுற்றறிக்கையில் பாலா மறைமாவட்டத்தில் இருக்கும் கத்தோலிக்க கிறிஸ்துவ குடும்பங்களில் 5 மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் பெற்று கொண்டால் அவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படும். மேலும் 5 பிள்ளைகளை பெற்று கொண்ட குடும்பங்களுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும்.மேலும் அத்தம்பதிகளின் குழந்தைகளுக்கு மறை மாவட்டத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இலவச கல்வியும், மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையும் வழங்கப்படும் என சசுற்றறிக்கை அனுப்பியது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் வசித்து வரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 18 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக குறைந்துள்ளதால் கத்தோலிக்கர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக பாலா மறைமாவட்ட குடும்ப நல இயக்கத்தின் பாதிரியார் ஜோசப் குற்றிங்கல் தெரிவித்துள்ளார்.

இயற்கை வளங்கள் போதுமான அளவு இல்லாததால் மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்று அரசு பாடுபட்டு வரும் நிலையில், ‘நாடு எக்கேடு கெட்டால் நமக்கென்ன நமக்கு நமது மதத்தினர் அதிக அளவில் இருக்க வேண்டும்’ என்பதை குறிக்கோளாகக் கொண்ட இது போன்றவர்கள் தங்கள் அறியாமையில் இருந்து விடுபட்டு தேசத்தின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வோருக்கு, அரசு வேலை இல்லை’ என, அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது. உத்திர பிரேதசம் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் கிடையாது என சட்டம் கொண்டு வரும் நிலையில் கேரளாவில் தற்போது ஒரு சர்ச் நிர்வாகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version