கேரள இந்துக்கள் வேறு தமிழக இந்துக்கள் வேறு ஸ்டாலினின் புது கண்ணோட்டம்! நெட்டிசன்கள் விளாசல்!

இன்றைய தினம் கேரள மக்கள் ஒணம் பண்டிகை கொண்டாடி வருகிறார்கள். இதற்கு அரசியல் தலைவர்கள் முதல்வர் உட்பட பல தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள் இந்த ஓணம் பண்டிகை இந்துக்கள் பண்டிகை ஆகும். இந்த நிலையில் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத திமுக ஓணம் பண்டிகைக்கு முந்தி கொண்டு வாழ்த்து தெரிவித்தார் இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்துப்பண்டிகையான ஓணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையே… இது என்ன கொள்கையோ?’ என, சமூக வலைதளங்களில், பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் ஸ்டாலினுக்கு தமிழக இந்துக்கள் வேறு கேரள இந்துக்கள் வேறு என புது கண்ணோட்ட்டத்தில் வாழ்த்து தெரிவித்துவிட்டாரோ என கேள்வியும் எழுந்துள்ளது.

ஸ்டாலின் வெளியிட்டு இருக்கும் வாழ்த்து செய்தி :கேரள பெருமக்களின் பண்பாடு, உணர்வுகளோடு ஒன்றியிருக்கும் திருவிழாக்களில் ஒன்றானது ஓணம் பண்டிகை.இந்த பண்டிகையை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும், தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும், தி.மு.க., சார்பில் என் இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.வாழ்த்து தெரிவித்த ஸ்டாலினை, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்

கேரள இந்துக்களுக்கு ஓணம் திருநாள் வாழ்த்து!

திமுக இந்துக்களுக்கு வாழ்த்துக்கள் கிடையாது, வசவுகள் மட்டுமே உண்டு!

இந்துவிரோத_திமுக

என பதிவிட்டுள்ளார்

மேலும் நெட்டிசன்கள்

தி.மு.க.,வில், 90 சதவீதம் ஹிந்துக்கள் உள்ளனர்’ என, ஸ்டாலின் கூறுகிறார். ஹிந்துக்களின் பண்டிகையான கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால், கேரள ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். இது என்ன கொள்கையோ?

தி.மு.க.,வில் உள்ள, 90 சதவீதம் ஹிந்துக்களில், எத்தனை சதவீதம் பேர் ஓணத்தை கொண்டாடுகின்றனர்?
ஓணம் வாழ்த்து, தி.மு.க.,வின் ஓட்டு அரசியல்; நாடகத்தின் ஒருபகுதி தான்
உதயநிதி, மண் பிள்ளையார் உருவப்படத்தை, ‘டுவிட்டர்’ தளத்தில் வெளியிட்ட பின், அவர் கொடுத்த விளக்கத்தை கேட்டு நாடே சிரித்தது
கந்த கஷ்டி கவசம் போன்ற பிரச்னை வரும் போது, ஸ்டாலின் வாய்மூடி மவுனம் காப்பார்
நரகாசுரன், பொய்யன்’ என்பார். ‘நாங்கள் ராவணின் வாரிசுகள்’ என்பார். ஆனால், வாமனன் வந்தது உண்மை; அதுபோல, மகாபலி இருந்தது உண்மை. இதற்கு பெயர் தான் திராவிட பகுத்தறிவு. தமிழகத்தில் வாழும் கேரள மக்களின் ஓட்டுக்களை வாங்க உதித்த திடீர் ஓட்டு அறிவு. இவ்வாறு, பலரும் விமர்சித்துள்ளர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version