கேரளா உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் போடும்..
தமிழக ஊடகங்களுக்கு நாம் சில புள்ளி விபரங்களை தர விரும்புகிறோம்.
பஞ்சாயத்துகளை விட்டு விடுவோம்.
பஞ்சாயத்துகளில் பெரும்பாலும் தனி நபர்கள் தங்கள் செல்வாக்கை வைத்து வெற்றி பெறுகிறார்கள்.
நாம் நகரசபைகளை மட்டும் அலசி ஆராய்ந்து பார்ப்போம்.
காங்கிரஸ் 2015 தேர்தலில் 1461 வார்டுகளில் வெற்றி பெற்றது.
ஆனால் இந்த தேர்தலில் 1289 வார்டுகளில் தான் வெற்றி பெற்று உள்ளது.
இதேபோல் கம்யூனிஸ்ட் கூட்டணி 2015 தேர்தலில் 1459 வார்டுகளில் வெற்றி பெற்றது.
ஆனால் இந்த தேர்தலில் அந்த கூட்டணி 1367 வார்டுகளில் தான் வெற்றி பெற்று உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி 2015 தேர்தலில் 287 வார்டுகளில் வெற்றி பெற்றது.
ஆனால் இந்த தேர்தலில் பாஜக 379 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளது.
இதில் யாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று எளிதாக விளங்குகிறது.
பாரதிய ஜனதா கட்சி கேரளா உள்ளாட்சி தேர்தலில் இதைவிட அதிகமான இடங்களில் வெற்றி பெற்று இருக்க முடியும்.
அதற்கு கேரளா பாஜகவின் உட் கட்சி பூசல்கள் தான்.
தற்போதைய தலைவர் கே. சுரேந்திரன் மற்றும் சோபா சுரேந்திரன் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
சோபா சுரேந்திரன் தன்னை கேரளா பாஜக தலைவர் ஆக்க வில்லை என்ற கோபத்தில் எங்கேயும் பிரச்சாரம் செய்ய போகவில்லை.
இவர்களின் மோதலால் தேசிய தலைவர்கள் யாரும் பிரச்சாரம் செய்ய வரவில்லை.
ஹைதராபாத் நகராட்சி தேர்தலுக்கு பிரதமர் உள்துறை அமைச்சர் யோகி ஆதித்யாநாத் போன்றவர்கள் வந்தது போல்..
இங்கேயும் வந்திருந்தால் கதை வேறு விதமாக மாறி இருக்கும்.
இருப்பினும் அடுத்து வரும் சட்ட சபை தேர்தலில் தாமரை இன்னும் நிறைய இடங்களில் மலரும் என்பதில் ஐயமில்லை.
..