கேரளாவில் முதல்முறையாக மசூதிகளில் தேசிய கொடி பறந்தது; 56 இஞ்ச் மோடியால் நடந்தது

மசூதிகளில் தேசிய கொடி ஏற்றப்படுவது இதுவரை நிகழாத சம்பவம். அதுவும் கேரள மாநிலத்தில் சொல்லவே வேண்டாம். அவர்கள் பாகிஸ்தான் கொடியை வேண்டுமானால் ஏற்றுவார்கள், இந்திய தேசியக் கொடியை ஏற்ற மாட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் முதல் முறையாக கேரளாவில் உள்ள மசூதிகளில் தேசிய கொடி ஏற்றிய அதிசயம் நிகழ்ந்து உள்ளது.

திருவனந்தபுரம் உள்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளில் நேற்று (26-ஆம் தேதி) தேசிய கொடி ஏற்றப்பட்டது. கேரள மாநில வக்பு வாரியம் அறிவுறுத்தி உள்ளதை தொடர்ந்து முஸ்லிம்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். 

இதேபோல கேரள மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்று முதல் முறையாக தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம், மோடி அரசு கொண்டுவந்துள்ள தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் நிகழ்ந்துள்ளது. தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில், முஸ்லிம்கள் தேசியக் கொடியை தூக்கி பிடித்தனர். இப்போது மசூதிகளிலும் தேசியக்கொடியை ஏற்ற தொடங்கியுள்ளனர். 

இது 56 இன்ச் மார்பு என்று முஸ்லிம்களால் கேலி செய்யப்படும் பிரதமர் நரேந்திர மோடியால் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றம் என்கின்றனர் தேசபக்தர்கள்.

Exit mobile version