தமிழகத்தில் கடந்த ஓரிரு வருடமாக போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இளம்தலைமுறையினரிடையே போதை கஞ்சா மதுவிற்கு அடிமையாகி வருகிறார்கள். ஆளும் திமுக அரசின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பிலிருக்கும் திமுகவினரே போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் கட்சியினரே போதை பொருள் கடத்துவதில் ஈடுபட்டிருப்பதால் காவல்துறை கைது செய்வதில் சுணக்கம் காட்டி வருவதாக தகவல்கள் கூறுகின்றது.
இந்தியாவையே உலுக்கிய சம்பவம் தான் 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல். இந்த கடத்தல் சம்பந்தமாக கைதாகியிருக்கும் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்குடன் தொடர்பிலுள்ளவர்களை கண்காணித்து வருகிறது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மகன் தவசி பாண்டியன் 26, வீட்டில்பதுக்கப்பட்டிருந்த 91 கிலோ போதைப் பொருட்களை போலீ சார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணா புரம் அருகே நொச்சிக்கு ளம் கனகராஜ் மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். தி.மு.க.,பொதுக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
இவரது மகன் தவசி பாண்டியன் வீடு கள் கட்டும் கட்டு தவசி கட்டுமான தொழில் மற்றும் மீது லாரி தொழில் செய்து வருகிறார். அவர் கிருஷ்ணாபுரம் கலைக்கோவில் நகர் பகுதியில் கட்டும் வீட்டில் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து சிவந்திபட்டி போலீசார் வீட்டை சோதனையிட்டு 3 சாக்கு மூட்டைகளில் இருந்த 69 கிலோ குட்கா, பட்டார்.22 கிலோ கூலிப் ஆகிய போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பாண்டியன் பொதுமக்களுக்கு அபாயம் தரும் பொருட்களை வைத்திருந்ததற்காக வழக்கு பதிவு செய்தனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே காரில் கடத்திவந்த 600 கிலோ குட்கா பொருளை காவல்துறை றிமுதல் செய்தனர். இந்த கடத்தல் தொடர்பாக திமுக மாவட்ட ஊராட்சித் தலைவரின் கணவர் உள்பட இரண்டு பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அரேங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.